tg travels

கண்டி பொபி நிறுவனத்தின் நுளம்பு விரட்டும் ஊதுவர்த்தி... அப்துல் றசாக் மற்றும் சப்னா றசாக் அறிமுகப்படுத்தினர்.



-ஜே.எம்.ஹபீஸ்-

கண்டி, மாவில்மடை பொபி நிறுவனம் 38 வருடகாலமாக ஊதுவர்த்தி மற்றும் வாசனைத் திரவியங்கள் தொடர்பான பிரபல நிறுவனமாக இயங்கி சுமார் 6000 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கி வருகிறது.

அதன் புதிய தயாரிப்பான நுளம்புகளை விரட்டக் கூடியம் சூழலுக்கு இசைவானதும் நருமணம் கொண்டதுமான டெங்கு நிவாரணியாக ஒரு புதிய ஊதுவர்த்தியின் மாதிரியில் அமைந்த புகை ஒன்றினை விற்பனைக்கு விட்டுள்ள்து.

இதன் அறிமுக விழா (30.10.2016) கண்டியிலுள்ள  கிரேண்ட் கெண்டியன் சொகுசு ஹோட்டலில் நடந்தது. மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா பிரதம அதிதியாகக் கலந்து அதனை வெளியிட்டு வைத்தார்.

பொபி நிறுவனத் தலைவர் அப்துல் றசாக் மற்றும் பணிப்பாளர் திருமதி சப்னா றசாக் அகியோர் உரையாற்றுவதையும் காணலாம்.
கலை நிகழ்ச்சிகளையும் ஏனைய நிகழ்வுகளையும் காணலாம்.
கண்டி பொபி நிறுவனத்தின் நுளம்பு விரட்டும் ஊதுவர்த்தி... அப்துல் றசாக் மற்றும் சப்னா றசாக் அறிமுகப்படுத்தினர்.  கண்டி பொபி நிறுவனத்தின் நுளம்பு விரட்டும்  ஊதுவர்த்தி... அப்துல் றசாக் மற்றும் சப்னா றசாக் அறிமுகப்படுத்தினர். Reviewed by Madawala News on 10/30/2016 05:09:00 PM Rating: 5