Free Space

விடுதியில் பெண் சடலமாக மீட்பு... அவருடன் தங்கி இருந்தவர் தூக்கில் தொங்கிய நிலையில்..



கதிர்காமம், வைத்தியசாலை வீதி பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார்.

கதிர்காமம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண்ணுடன் அந்த விடுதியில் தங்கியிருந்த நபர் ஒருவர் குறித்த கொலையை மேற்கொண்டிருப்பதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கதிர்காமம், பெரஹிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

அந்தப் பெண்ணை கொலை செய்த சந்தேகநபர், திஸ்ஸமகாராம, காவன்திஸ்ஸ பிரதேசத்தில் உள்ள உறவினர் வீடொன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் கதிர்காமம், பெரஹிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணகைளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதியில் பெண் சடலமாக மீட்பு... அவருடன் தங்கி இருந்தவர் தூக்கில் தொங்கிய நிலையில்.. விடுதியில் பெண் சடலமாக மீட்பு... அவருடன் தங்கி இருந்தவர் தூக்கில் தொங்கிய நிலையில்.. Reviewed by Madawala News on 10/29/2016 02:46:00 PM Rating: 5