Oceas

தானே லசந்த விக்ரமதுங்கவை கொன்றதாக கடிதம் எழுதி வைத்து, இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை. ( Video)



ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது நான் என தெரிவித்து கடிதமொன்றை எழுதி வைத்து விட்டு ஓய்வு பெற்ற இராணுவ வீரரொருவர் இன்று  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் , கேகாலை  கருடுபன -தெஹிபிடிய பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையென கேகாலை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வுப்பிரிவின் அதிகாரியான மலிந்த உதலாகமவை விடுதலை செய்யுமாறும் , இந்த கடிதத்தை உளவுத்துறைக்கு ஒப்படைக்குமாறும் , அவர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை கேகாலை பொது மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.

தானே லசந்த விக்ரமதுங்கவை கொன்றதாக கடிதம் எழுதி வைத்து, இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை. ( Video) தானே  லசந்த விக்ரமதுங்கவை கொன்றதாக கடிதம் எழுதி வைத்து,  இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை. ( Video) Reviewed by Madawala News on 10/14/2016 03:27:00 PM Rating: 5