Accaddemy

புத்தர் சிலையை பதித்து, திறந்து வைக்கும் நிகழ்வில் முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்களவர்கள் ஒன்றிணைவு.



சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து தாம் வாழும் பிரதேசத்தில் புத்தர் சிலையொன்றை பதிப்பதன் மூலம் இந்நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் பறைசாட்டியுள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் நல்லிணக்க வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


புஸ்ஸெல்லாவ தோட்டப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பட உதவி : லங்காதீப

unnamed

புத்தர் சிலையை பதித்து, திறந்து வைக்கும் நிகழ்வில் முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்களவர்கள் ஒன்றிணைவு. புத்தர் சிலையை பதித்து, திறந்து வைக்கும் நிகழ்வில் முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்களவர்கள் ஒன்றிணைவு. Reviewed by Madawala News on 10/02/2016 02:42:00 PM Rating: 5