tg

CCTV வீடியோ வெளியானது.. பிரபல நடிகை கவீஷா ஆயெஷானி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தது இவ்வாறு தான்.



நுகேகொடை, ஜுப்லி கம்பத்துக்கருகில், இன்று அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில், நடிகை கவீஷா ஆயெஷானி (25 வயது) உயிரிழந்த சம்பவம் அறிந்ததே..
இது  தொடர்பில்  சந்தேகநபரொருவரும்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பஸ் சாரதி என்று கூறப்படும் நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்கு உள்ளான பஸ் நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாலை 3 மணியளவில்  எதிர்த் திசையில் வந்த நடிகையின் கார், குறித்த பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப் படுகின்றது.

விபத்தில் படுகாயமடைந்த நடிகை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 சடலம், களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகள் இன்று மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் வெளியான் CCTV வீடியோ..

CCTV வீடியோ வெளியானது.. பிரபல நடிகை கவீஷா ஆயெஷானி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தது இவ்வாறு தான். CCTV வீடியோ வெளியானது.. பிரபல நடிகை கவீஷா ஆயெஷானி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தது இவ்வாறு தான். Reviewed by Madawala News on 10/16/2016 02:38:00 PM Rating: 5