Accaddemy

இலங்கையில் பெளத்த மதத்தை அழிக்கும் வேலையை CIA செய்துவருகிறது:


இலங்கையில் பௌத்த மதத்தை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை அமெரிக்காவின் உலவுப்பிரிவான சீஐஏ முன்னெடுத்துள்ளதாக மல்வத்துப்பீடத்தின்  துணை மகாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்...

இலங்கையில் தேரவாத பௌத்த மதத்தையும், பௌத்த புனிதத் தலங்களையும் அழித்துவிட்டு வேற்றுமதத் தலங்களை நிர்மாணிப்பதற்கான சதியில் அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏ ஈடுபட்டுவருகின்றனர்.

கொரியாவில் மஹாயான பௌத்த மதத்தை அழிப்பதற்கு அமெரிக்க உளவுத்துறை மேற்கொண்ட அதே முயற்சிகளை தற்போது இலங்கையிலும் நடைமுறைப்படுத்தியுள்ளனர்,இந்த விவகாரம் தொடர்பாக கூர்மையான புலனாய்வு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.


இலங்கையில் பெளத்த மதத்தை அழிக்கும் வேலையை CIA செய்துவருகிறது: இலங்கையில் பெளத்த மதத்தை அழிக்கும் வேலையை CIA செய்துவருகிறது: Reviewed by Madawala News on 10/21/2016 03:25:00 PM Rating: 5