Accaddemy

புத்தளம் பிரதேச ஜும்மா பள்ளிவாயலில் தேங்காய் மட்டையால் அடித்ததாக முறைப்பாடு செய்த பெண் ஜெசீமா எங்கே போனார்?



விபச்சார குற்றச்சாட்டு காரணமாக  புத்தளம் பிரதேச ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகத்தினர்  தனக்கு தேங்காய் மட்டையால் அடித்ததாக பெண் ஒருவர்  போலீசில்  முறைப்பாடு செய்ததை  அடுத்து ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகத்தினர் நான்கு பேர் கைது செய்யபட்டு விளக்கமறியலில் அடைக்கபட்டது அறிந்ததே.

இந்நிலையில் முறைப்பாட்டை விசாரணை செய்ய சம்பந்தபட்ட பெண் ஜெஸ்மிர் சித்தி ஜெசீமா நீதிமன்றால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள  நிலையில் அவர் தலைமறைவாகி விட்டதாக தெரிவிக்கபடுகிறது.

அதனால் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவரை விசாரிக்க முடியாமல் உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக குறிப்பிட்ட பெண் நதீரா அப்தார் என்ற தனது சட்டத்தரணியுடன் வந்து முறைப்பாட்டை செய்து பின்னர் அந்த முறைப்பாட்டை வாபஸ் வாங்க முயற்சி செய்துள்ளார்.

அவர் விசாரணைக்கு சமூகமளிக்காததால் அவரை சந்தித்து வாக்குமூலம் எடுக்க சென்ற வேலை அவர் தலைமறைவாகி உள்ளது தெரிய வந்ததாக போலிசார் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் பிரதேச ஜும்மா பள்ளிவாயலில் தேங்காய் மட்டையால் அடித்ததாக முறைப்பாடு செய்த பெண் ஜெசீமா எங்கே போனார்? புத்தளம் பிரதேச ஜும்மா பள்ளிவாயலில் தேங்காய் மட்டையால் அடித்ததாக முறைப்பாடு செய்த பெண்  ஜெசீமா எங்கே போனார்? Reviewed by Madawala News on 10/29/2016 10:16:00 AM Rating: 5