பிரதமரின் விருப்பத்துக்கு ETCA கைச்சாத்திட அனுமதிக்க முடியாது ...


இந்தியாவுடன் கைச்சாத்திடவுள்ள எட்கா வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் பிரதமரின் தனி விருப்பத்துக்கு செயற்பட அனுமதியளிக்க போவதில்லை என சுதந்திர கட்சி பேச்சாளர் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிடும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

தொடந்து அங்கு கருத்து வெளியிட்ட அவர்...

இந்தியாவுடன் கைச்சாத்திடவுள்ள எட்கா வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் பிரதமரின் தனி விருப்பத்துக்கு செயற்பட அனுமதியளிக்க போவதில்லை, குறிப்பாக தொழிலாளர்களை மற்றும் துறைசார்ந்தவர்களை பணியமர்த்துவது தொடர்பிலான உடன்படிக்கை உள்ளிட்ட விடயங்களை நாம் ஆராய்ந்தபின்னர் ஆதரவு வழங்குவது தொடர்பில் நாம் தீர்மாணிப்போம் என குறிப்பிட்டார்.


பிரதமரின் விருப்பத்துக்கு ETCA கைச்சாத்திட அனுமதிக்க முடியாது ... பிரதமரின் விருப்பத்துக்கு ETCA கைச்சாத்திட அனுமதிக்க முடியாது ... Reviewed by Madawala News on 10/07/2016 09:16:00 AM Rating: 5