Free Space

பேராதனைப் பல்கழைக்கழக நாடக விழாவில் கைகலப்பு.



-ஜே.எம்.ஹபீஸ்-

பேராதனைப் பல்கழைக்கழகத்தில் வருடாந்தம் இடம் பெற்று வரும்நாடக விழாவில் கைகலப்பு ஏற்பட்டதாகத்தெரிய வருகிறது.

 இலங்கையில் மிகப்பிரசித்தமான மேடை நாடகங்கள் இதில் மேடையேற்றப்படும். அந்த வரிசையில் கடந்த 10ம் திகதி முதல் 15ம் திகதி வரை சரச்சந்திர திறந்த வெளி அரங்கில் பல்வேறு நாடகங்கள் அரங்கேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

(நேற்று 10.10.2016) இரவு பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திராவின் 'மனமே' என்ற பிரபல சிங்கள நாடகம் அரங்கேரிக் கொண்டிருந்த போது கூழ் முட்டை வீச்சு இடம் பெற்றுள்ளது மாணவர் தரப்பிலிருந்தே இந்த கூழ் முட்டை விச்சு இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்படகிறது

இதனால் ஒரு பரபரப்பு ஏற்பட்டதுடன் அங்கு சற்று நேரம் அமளிதுமளி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இதில் எவரும் காயமடைந்ததாகப் பதிவாக வில்லை.
பேராதனைப் பல்கழைக்கழக நாடக விழாவில் கைகலப்பு. பேராதனைப் பல்கழைக்கழக நாடக விழாவில் கைகலப்பு. Reviewed by Madawala News on 10/11/2016 04:05:00 PM Rating: 5