Oceas

இலங்கையில் கைப்பற்றப்பட்ட 'அந்த' பொருட்கள்..



யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பகுதியில் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள், நாணயத்தாள் மற்றும் 35 கிலோ கிராம் கஞ்சா ஆகியவற்றை கடத்தி வந்த இந்திய பிரஜை உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதனை, காவற்துறை விசேட அதிரடி படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து கைபற்றியுள்ளனர்.

இன்று அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் தமிழகம். தங்கச்சி மடம், சூசைபுரம் பகுதியை சேர்ந்த லோறன்ஸ் மெரில்டன் என்பவரும் மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 வகைபட்ட 411 பாலியல் உணர்வுகளை தூண்ட கூடிய குளிசை காட்கள், பணம் அச்சிடுவதற்காக பயன்படுத்தப்படும் தாள்கள் மற்றும் 35 35 கிலோ கிராம் ஆகியன மீட்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் பயன்படுத்திய படகும்(டிங்கி படகு) மற்றும் 25 குதிரை வலு இயந்திரம் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்தவர்களில் ஒருவருக்கு 25 வயது எனவும் மற்றயவருக்கு 20 வயது எனவும் கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கைது செய்யப்பட்டவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இலங்கையில் கைப்பற்றப்பட்ட 'அந்த' பொருட்கள்.. இலங்கையில் கைப்பற்றப்பட்ட 'அந்த' பொருட்கள்.. Reviewed by Madawala News on 10/15/2016 07:44:00 PM Rating: 5