Ad Space Available here

(படங்கள்) கூலிக்கு கொஞ்சப் பேர்களை அமர்த்தி பேஸ்புக்கில் எழுதுபவர்களைப் பற்றி நாம் ஒரு போதும் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை. Hakeem
இந்த அரசாங்கத்தில்  நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு வழங்ககப்பட்ட நாள் முதல் குருநாகலைக்கு அபிவிருத்தி விசயங்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற விசயத்தில் என்னுடைய கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை விடவும் ஏனைய மாகாண சபை உறுப்பினர்களையும் விடவும் ஆகக் கூடுதலான முயற்சி செய்வோராக இருப்பார்களாக இருந்தால் அது வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷாவைத் தவிர வேறு எவரும் இருக்க முடியாது.

பாரியளவிலான  அபிவிருத்திக்கான நிதிகளை குருநாகல் மாவட்டத்திற்கு கொண்டு வந்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் அவருக்கு நடந்த அநியாயம்  இரட்டிப்பு வைராக்கியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐக்கிய தேசிய கட்சியோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொண்டுள்ள உறவில் பெரியதொரு அநியாயம் ஒரு போதும் நடந்தது கிடையாது.

 எனவே அந்தப் பின்னணியில் அதனால் சோர்ந்து போகாமல் அடிக்கடி அந்த தேர்தல் காலத்தில் அவரை விமர்சிப்பதற்காக என்று முக நூல்களில் எல்லாம் விமர்சனங்கள் நடந்து கொண்டிருந்த போது நிறையக் கலவரங்கள் அடைந்து என்னிடம் வருவார்.  நான் படுகிற பாட்டை விட நீங்கள் படுகிறீர்கள். எனவே நீங்கள் இதைப் பற்றி அலட்டிக் கொள்ளக் கூடாது. விமர்சனங்கள் வரத்தான் செய்யும் நாங்கள்  ஓடுகிறமாதரி ஓடிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.  அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவது அவசியமில்லை.

இறுதியில் மக்கள் தான் தீர்ப்பாளிகளாக இருக்க வேண்டும். கூலிக்கு கொஞ்சப் பேர்களை அமர்த்தி எழுதுபவர்களைப் பற்றி நாம் ஒரு போதும் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை என்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷாவின் வேண்டுகோளின் பிரகாரம் குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய மற்றும் நிகரெட்டிய இரு தேர்தல் தொகுதியிலும்  நகர திட்டமிடல் நீh வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் ஊடாக 36 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று காபட் வீதிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று 21-10-2016 நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் கெகுணுகொல்ல வில் இடம்பெற்ற அங்குரார்ப்பண ஆரம்ப வேலையை ஆரம்பித்து உரையாற்றும் போது அங்கு இவ்வாறு தெரிவித்தார்.

வெல்பொத்துவௌ இருந்து கொபெய்கனே செல்லும் வீதி, கொபெய்கனேயிலிருந்து பன்னல செல்லும் வீதி கெகுணுகொல்லவிலிருந்து மடலஸ்ஸ செல்லும் வீதி ஆகிய மூன்று வீதிகளுக்கான அடிக்கல் நாட்டு வைபவம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண அபிவிருத்தி, உள்விகாரம் மற்றும் கலாசாhரத்துறை அமைச்சர் எஸ்.பி. நாவின்ன, வடமேல் மாகண சபையின் பாதை, போக்குவரத்து கூட்டுறவுத் துறை அமைச்சர் குனதாச தெஹிகம, வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா, நிலன்த சுபுன் ராஜபக்ஷ. நிகரெட்டிய ஐ. தே. கட்சி அமைப்பாளர் தென்னகோன்ன உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்


எனினும் நீண்ட காலமாக நிலவி வந்த ஒரு குறை நீங்கி இருக்கிறது. அதில் முதல் கண் நான் மைத்திரிப்பால சிறிசேனவுக்கும் எமது பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவுக்கும் நன்றி கூற வேண்டும். தாராளமாக அபிவிருத்திகளைச் செய்வதற்கு உதவிகளைவ் செய்து தந்தது மட்டுமல்ல தேவை ஏற்படும் போதெல்லாம் எங்களுடைய கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்மைக்காக வேண்டி நன்றி கூற வேண்டும்.
இவ்வாறன ஒதுக்கீடுகளை எல்லாம் செய்கிற போது அடிப்படையாக அமைவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கிற இயக்கத்தின் பலம் என்பதை நாங்கள் மறந்து விட முடியாது.

நேற்று   மறைந்த எமது தலைவர் மர்ஹும் அஷரப்பின் 68 வது பிறந்த நாள். அடிக்கடி நான் நினைத்துப் பார்ப்பது உண்டு.  மறைந்த எமது தலைவர் எம் மத்தியில் இருந்திருந்தால்  இன்று எவ்வாறாக இருக்கும் என்று நினைப்பது உண்டு. ஒரு ஆலவிருட்சமாக இருந்த அவருடைய நிழலில் நாங்கள் தலைமைத்து நெருக்கடியின் சுமைகள் என்ன என்று பெரிதாக உணர்வதற்கு எந்த தேவையும் இருக்க வில்லை. அத்தனை சுமைகளையும் தாங்கி கொண்டு ஒரு கட்சியை முஸ்லிம்களுக்காக தனித்துவமான ஒரு அரசியல் இயக்கத்தை ஆரம்பிப்பது என்பதே மிகப் பெரிய சவலாக இருக்கிற ஒரு காலகட்டத்தில் தைரியமாக இந்த இயக்கத்தின் வித்தாக அமைந்து அதை வளர்த்தெடுத்த எங்களுடைய மறைந்த தலைவர் இந்த குருநாகல் மாவட்டத்தில் மிதிக்காத மண் இருக்காது என்றளவுக்கு ஓடித்திரிந்து வளர்த்த இயக்கம் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். இந்த இயக்கத்தில் இருந்து வளர்ந்தவர்கள் இன்று வௌ;வேறு அமைச்சுப் பதவிகளில் இருந்து கொண்டு இருக்கிறார்கள். இடையில் போய் குளிர் காய்ந்து விட்டு வந்தவர்கள். தொடர்ந்தும் இருந்து அமைச்சுப் பதவிகளுக்காக  ஆசைப்பட்டு பிரிந்து போனவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது.

ஆனால் அவர்கள் எல்லோரும் இந்த இயக்கத்தின் வீரியத்தை எப்படித்தான் பாதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் இதற்கு என்று இருக்கிற அடிமட்டத் தொண்டர்களுடைய  அர்ப்பணத்தின் ஊடாக அந்த விடா முயற்சியின்  பிரதி பலிப்பாக இந்த ஆட்சியிலே எங்களுக்கு தாராளமாக அபிவிருத்தி செய்யக் கூடிய ஒரு வாய்ப்பு இருப்பதையிட்டு நாங்கள் சந்தோசப்படுகிறோம்.
குறிப்பாக அடுத்த வருடம் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் ஊடாக நான் நீர் வழங்கல் திட்டங்களுக்கு  மாத்திரம் 300 பில்லியன் செலவு செய்யவுள்ளோம். இந்தப் பாரிய நிதிஒதுக்கீட்டை செய்வதற்கு அதற்கான கேள்விப் பத்திரங்களைக் கோருவதும் அதற்கான ஒதுக்கீடுகளைப் பெறுவதற்கான அமைச்சரவைப் பத்திர அங்கீகாரத்தைப் பெறுவதும் ஒரு முடியும் தருணத்திற்கு வந்து ஏற்கெனவே ஆரம்பித்த நீர் வழங்கல் திட்டங்களோடு இன்னும் ஆரம்பம் செய்யவுள்ள மொத்த திட்டம் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் மூன்று இலட்சம் இலட்சங்கள் செலவு செய்யக் கூடிய பாரிய அமைச்சுப் பொறுப்பு தனக்குத் தரப்பட்டுள்ளது.
இந்த குருநாகல் மாவட்டத்தில் 5 சத வீதம்தான் குழாய் குடி நீர் வழங்குகிற செயல் திட்டம் அமுலில் இருந்திருந்தது. அடுத்த மூன்று வருட முடிவில் அது 60 சத விகிதமாக குருநாகல் மாவட்டத்தில் அதனைத் பூர்த்தி செய்வதற்கான அதற்கான அங்கீகாரத்தை ஏற்கெனவே பெற்ற இன்னும் பெற இருப்பவை என்ற அடிப்படையில் திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறறோம்.


பன்னல, குளியாப்பிட்டிய, மாகம்புர என்ற பெரிய செயற் திட்டம் தெதுரு ஓய நீர் வழங்கல் திட்டம் கட்டுப்பொத்த நீர் வழங்கல் திட்டம் இன்னும் எத்தனையோ திட்டங்கள் நாங்கள்  அடையாளப்படுத்தி அவைகளைச் செய்து கொண்டு வருகிறோம். அமைச்சர் எஸ். பி. நாவின்ன கூட கிராமிய நீர் வழங்கல் திட்டங்களுக்காக 800 மில்லியன் ரூபா எமக்கு ஒதுக்கித் தந்துள்ளார். அடுத்த வருடம் நகரத் திட்டமிடலுக்காக எவ்வளவு ஒதுக்கப்படும் என்று நாங்கள் அறியாவிட்டாலும் கெகுணுக்கொல்ல பாடசாலை அதன் சுற்று வட்டாரத்திலுள்ள  நவீனப்படத்தவுள்ளோம். அதற்கான ஒதுக்கீடுகளைச் செய்து தருவோம்.


இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றை ஆட்சியின் பங்காளியா இருந்து அபிவிருத்தி வேலைகளைக் காட்டுகிற பலத்தை விடவும் பலமடங்கு இந்த சமூகத்தின் உரிமை குறித்த பிரச்சினைகளுக்கான நிரந்தரமான தீர்வைனக் காண்பதிலே கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.

பாராளுமன்றம் இன்று புதிய அரசியல் யாப்பை அறிமுப்படுத்துவதற்குத் தயாராகிக் கொண்டு இருக்கிறது.  அந்த அரசியல் யாப்பில் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள்  பறிபோகாமல்பாதுகாக்கிற  மிகப் பெரிய பாரிய பொறுப்பையும்  நாங்கள் சுமந்து கொண்டு இருக்கிறோம் என்ற அடிப்படையில்  கடந்த ஒரு மாதகாலமாக தீவிரமான ஒரு போராட்டத்தை நாங்கள் நடத்திக் கொண்டு இருக்கிறோம்.  புதிய தேர்தல் முறை மாற்றம் ஏற்படுகிற போது முஸ்லிம் சமூகம் தன்னுடைய விகிதாசாரத்திற்கு ஏற்ப தற்போதைய விகிதாசாhர முறையிலே கடந்த பொதுசன மதிப்பீட்டின்படி 9.75 விகிதம் முஸ்லிம்கள் இருக்கிறோம்.  எங்களுடைய விகிதாசாரத்திற்கு ஏற்றபடியாக ஆசனங்கள் இருக்க வேண்டும். ஏற்கெனவே 22 ஆசனங்கள் முஸ்லிம்கள் இருக்கிறோம்.  மலையக உட்பட தமிழர்கள் 28 பேர் இருக்கிறோம். இந்த நாட்டின பாராளுமன்றத்தில்  50 சிறுபான்மையினர் இருக்கிறோம்.

 புதிய தேர்தல் முறையை அறிமுப்படுத்துகிற போது இதில் பாரியதொரு வீழ்ச்சி வந்து விடலாமா?   ஏன்ற ஆபத்துக் குறித்து இந்த சமூகத்தில் இருக்கிற எல்லா அரசியல் தலைமைகளையும் அது சம்மந்தமாக  அறிவுறுத்தி இதற்கான அழுத்தத்தைக் கொடுக்கிற விசயத்தையும் பாராளுமன்றத்தில் ஒன்றாய் இருந்து போராடுகிற விசயத்தையும் ஏனைய சிறுபான்மைக் கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு பாரிய பொறுப்புக்குரிய இந்த வேலையைச் செய்து கொண்டு இருக்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி-(படங்கள்) கூலிக்கு கொஞ்சப் பேர்களை அமர்த்தி பேஸ்புக்கில் எழுதுபவர்களைப் பற்றி நாம் ஒரு போதும் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை. Hakeem (படங்கள்) கூலிக்கு கொஞ்சப் பேர்களை அமர்த்தி பேஸ்புக்கில்  எழுதுபவர்களைப் பற்றி நாம் ஒரு போதும் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை. Hakeem Reviewed by Madawala News on 10/23/2016 08:23:00 PM Rating: 5