Accaddemy

நேற்று வபாத்தான மௌலவி ஷைகுல் பலாஹ் யார்? (வாழ்க்கை வரலாறு­ இதோ)



அமானுல்லா கமால்தீன்.

காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ் அதிபர் மௌலானா மௌலவி 'ஷைகுல் பலாஹ்' எம்.ஏ. அப்­துல்லாஹ் ரஹ்­மானி அவர்கள் தென்­னிந்­தியா தஞ்சை மாவட்டம் அதிராம் பட்­டி­னத்தில் 21.03.1932 இல் பிறந்­தார்கள்.

இவர்­களின் தந்தை அல்­லாமா அல்ஹாஜ் முகம்­மது அபூ­பக்கர் ஆலிம் ஆவார்கள். இப்­பெ­ரியார் 1950 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரை மஹ­ர­கம மத்­ர­ஸதுல் கபூ­ரிய்யா அரபுக் கல்­லூ­ரியில் விரி­வு­ரை­யா­ள­ராகக் கட­மை­யாற்­றி­யுள்­ளார்கள்.

1955 ஆம் ஆண்டு முதல் 1965  ஆம் ஆண்டு வரை அட்­டா­ளைச்­சேனை ஷர்க்­கியா அரபுக் கல்­லூ­ரியில் அதி­ப­ராகக் கட­மை­யாற்றி பின்னர் இந்­தி­யாவில் கீழ்க்­கரை காயல்­பட்­டினம் போன்ற இடங்­களில் கல்விப் பணி­யாற்­றி­னார்கள்.

தந்தை அபூ­பக்கர் ஆலிம் ஷாஹிப் போன்று தன­ய­னான மௌலானா மௌலவி அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்­களும் ஆலி­மாக வெளி­வ­ரு­வ­தற்­காக சொந்த ஊர் அதி­ராம்­பட்­டி­னத்தில் மத்­ர­ஸதுல் ரஹ்­மா­னிய்யா அரபுக் கல்­லூ­ரியில் சேர்ந்து மார்க்க கல்வி கற்று  01.04.1954 ஆம் ஆண்டு ரஹ்­மானி பட்­டத்­துடன் மத்­ரஸா வாழ்க்­கையை முடித்து வெளி­யே­றி­னார்கள்.

ஆசி­ரி­ய­ராக அதிராம் பட்­டினம் அல் மத்­ர­ஸதுல் ஸலா­ஹிய்­யாவில் அதி­ப­ராகப் பதவி ஏற்று நான்கு ஆண்­டுகள் நடத்­தி­னார்கள். அதன் பின்னர் தனது தந்­தை­யுடன் அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் 03.05.1958 ஆம் ஆண்டு இலங்­கைக்கு வந்து அட்­டா­ளைச்­சேனை அரபுக் கல்­லூ­ரியில் விரி­வு­ரை­யா­ள­ராகக் கட­மை­யாற்­றினார்.

பின்னர் 05.01.1955ல்இல் ஆரம்­பிக்­கப்­பட்ட காத்­தான்­குடி மத்­ர­ஸதுல் பலாஹ் அரபுக் கல்­லூ­ரிக்கு தகுந்த விரி­வு­ரை­யாளர் தேவைப்­பட்­டதால் மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ. முஹம்­மது அப்­துல்லாஹ் (ரஹ்­மானி) அவர்கள் 13.10.1959 ஆம் ஆண்டு உப அதி­ப­ராக காத்­தான்­குடி மத்­ர­ஸதுல் பலாஹ்வில் கட­மையைத் தொடர்ந்­தார்கள்.

இவர்­க­ளது அய­ராத முயற்­சி­யினால் காத்­தான்­கு­டியின் கண்­ணாக மத்­ர­ஸதுல் பலாஹ் இலங்கை முழு­வதும் ஒளி வீசத்­தொ­டங்­கி­யது.

இலங்­கையில் முத­லா­வது அல்­குர்ஆன்  மனன 'ஹிப்ழ்' வகுப்பு மத்­ர­ஸதுல் பலாஹ்­வில்தான் முத­லா­வ­தாக 18.12.1971 இல் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. இந்த வகுப்பை தென் இந்­தியா காயல் பட்­டி­னத்தைச் சேர்ந்த மர்ஹூம் மௌலானா மௌலவி அல் ஹாபிழ் ரீ.எம்.கே. செய்யித் அஹ்மத் (முத்து வாப்பா) ஆலிம் அவர்கள் ஆரம்­பித்து வைத்­தார்கள்.

இந்த 'ஹிப்ழ்' பணிக்­காக அதிபர் அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள்  சம்­மாந்­து­றையைச் சேர்ந்த மௌலவி ஹாபிழ்  ஏ. ஹஜ்ஜி முஹம்மத் அவர்­களை  நிய­மித்­தார்கள்.

இவர்­களின் அய­ராத முயற்­சியின் கார­ண­மாக 1975 ஆம் ஆண்டு அல்குர் ஆனின் 6666 வச­னங்­க­ளையும் மனனம் செய்த முத­லா­வது ஹாபிழ்கள் குழு பட்டம் பெற்று வெளி­யே­றி­னார்கள்.

இலங்கை அர­சாங்­கத்தின் கல்வி அமைச்­சினால் 17.11.1959  இல் இம் மத்­ரஸா பதி­யப்­பட்டு 1983 ஆம் ஆண்டு இக் கல்­லூரி மத்­ர­ஸதுல் பலாஹ் என்ற பெயரை மாற்றி 'ஜாமி­அதுல் பலாஹ்' எனும் பெயரில் உயர்­க­லா­பீ­ட­மாக மாற்­றப்­பட்­டது.

அப்­துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் அதிராம் பட்­டினம் செ.மு.க.நூறு முஹம்­மது மரைக்­காயர் அவர்­களின் புதல்வி உம்முல் பஜ்­ரியா அவர்­களை 02. 09. 1961  ஆம் ஆண்டு மண­மு­டித்­தார்கள்.

இந்த இனிய வாழ்வில் மூன்று ஆண் குழந்­தை­களைப் பெற்­றெ­டுத்­தார்கள். முறையே மூத்த புதல்வர் முஹம்­மது  ரஹ்­ம­துல்லாஹ். முஹம்­மது முஸ்­தபா மூன்றாம் மகன் முஹம்­மது பறக்­கத்­துல்லாஹ் ஆவார்கள்.தனது மூத்த புதல்வர் முஹம்­மது ரஹ்­ம­துல்­லாஹ்­வையும் இளைய புதல்வர் பறக்­கத்­துல்­லாஹ்­வையும் காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ்வில் கல்வி பயில வழி செய்­தார்கள். அதன் பிர­தி­பலிப்பாக1991 ஆம் ஆண்டு ரஹ்­ம­துல்லாஹ் மௌலவி பட்டம் பெற்று பின்னர் வாழைச்­சேனை 'குல்­லி­யதுன் நஹ்­ஜதில் இஸ்­லா­மிய்யா' அரபுக் கல்­லூ­ரியில் அதி­ப­ராகக் கட­மை­யாற்­று­கின்றார்.

இரண்­டா­வது மகன் முஸ்­தபா மர­ண­ம­டைந்­து­விட்டார். மூன்­றா­வது மகன் முஹம்­மது பறக்­கத்­துல்லாஹ் கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் இயங்கும் 'ஜாமிஆ மதீ­னத்துல் இல்ம்' கல்­லூ­ரியில் அல்­ஹாபிழ் பட்டம் பெற்று காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ்வில் மௌலவி பட்டப் படிப்பைத் தொடர்ந்து இதே கல்­லூ­ரியில் போத­னா­சி­ரி­ய­ராகக் கட­மை­யாற்­று­கின்றார்.

55 வருட கால­மாக பெற்ற தாயை பிறந்த பொன்­னாட்டை உற்­றாரை உற­வி­னரை சுற்­றத்­தாரை நண்­பர்­களை பிரிந்து கடல் கடந்து வந்து கல்விப் பணி­யாற்­றிய அன்னார் சொந்த ஊரில் தங்­கி­வாழ்ந்த காலம் கொஞ்­சம்தான்.

தலை­நகர் கொழும்பு 2 ஆம் குறுக்குத் தெரு சம்­மாங்­கோட்டார் 'ஜாமிஉல் அழ்பர்' பள்­ளி­வா­யலைக்  கட்­டு­வ­தற்கு நிலம்­கொ­டுத்து அதனை அழ­காகக் கட்டி முடித்­த­ பெருமை அப்­துல்லாஹ் ஹஸ்­ரத்தின் பாடனார் அப்துல் காதிர் ஆலிம் ஸாஹிப் அவர்­க­ளையே சாரும்.இந்தப் பரம்­ப­ரை­யினர் இன்­று­வரை இப்­பள்­ளியை நிரு­வ­கிப்­பதும்
நேற்று வபாத்தான மௌலவி ஷைகுல் பலாஹ் யார்? (வாழ்க்கை வரலாறு­ இதோ) நேற்று வபாத்தான மௌலவி ஷைகுல் பலாஹ் யார்? (வாழ்க்கை வரலாறு­ இதோ) Reviewed by Madawala News on 10/13/2016 06:40:00 AM Rating: 5