Free Space

இராணுவ அதிகாரி மீது வடக்கில் தாக்குதல் என வைரலாக பரவும் புகைப்படத்துக்கு இராணுவத்தினரின் விளக்கம்.



வடபகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரி மீது சிவில் உறுப்பினர் ஒருவர் தாக்குதல் மேற்கொள்ளும் வகையிலான புகைப்படம் ஒன்று இந்த நாட்களில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றது.

இந்த புகைப்படத்தின் உண்மை தன்மை தொடர்பில் இலங்கை இராணுவத்தினர் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இராணுவ அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் பதிவாகவில்லை என இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் உள்ளதனை போன்ற சீருடை இந்த நாட்டு பாதுகாப்பு பிரிவு பயன்படுத்துவதில்லை என இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பாதுகாப்பு பிரிவு புகைப்படத்தில் உள்ளதனை போன்று கை வளைப்பத்தில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த புடைக்கப்படம், பங்களாதேஷ் இராணுவம் தொடர்பில் 2007ஆம் ஆண்டு பிபிசி செய்தி சேவையினால் வெளியிடப்பட்ட புகைப்படம் என தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய நாட்களாக வடமாகாணத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாக்கும் நோக்கில், திட்டமிட்ட பல்வேறு போலியான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

சமகால அரசாங்கத்திற்கான எதிரான குழுவொன்று இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், இவ்வாறான போலியான தகவல்கள் பறிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ அதிகாரி மீது வடக்கில் தாக்குதல் என வைரலாக பரவும் புகைப்படத்துக்கு இராணுவத்தினரின் விளக்கம்.  இராணுவ அதிகாரி மீது வடக்கில் தாக்குதல் என வைரலாக பரவும் புகைப்படத்துக்கு இராணுவத்தினரின் விளக்கம். Reviewed by Madawala News on 10/31/2016 01:59:00 PM Rating: 5