Free Space

கண்டி HND மாணவர்கள் சண்டை.. மூவர் காயம். கல்லூரியும் மூடப்பட்டது.



- ஜே.எம்.ஹபீஸ்-

கண்டி, உயர் தொழில் நுட்பக் கல்லூரி HND மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.

(24.10.2016)காயமடைந்த மூவரும் கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளனர்.

உயர் தொழில் நுட்பக் கல்லூரி சிரேஷ்ட மாணவர்களுக்கும் கனிஷ்ட மாணவர்களுக்குமிடையே இம் மோதல் ஏற்பட்டதாகப் பொலீசார் தெரிவித்தனர்.

 மேற்படி மோதல் காரணமாக கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்ததுடன் மாணவர்களை கல்வி நிறுவனத்தை விட்டு வெளியேறும்படி நிர்வாகம் கட்டளையிட்டுள்ளது.

அத்துடன் உயர் தொழில் நுட்பக் கல்லூரியை காலவரையறையின்றி மூடுவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


கண்டி HND மாணவர்கள் சண்டை.. மூவர் காயம். கல்லூரியும் மூடப்பட்டது. கண்டி  HND மாணவர்கள் சண்டை.. மூவர் காயம்.  கல்லூரியும் மூடப்பட்டது. Reviewed by Madawala News on 10/25/2016 10:04:00 AM Rating: 5