முகம் மூடுவது கட்டாயம் என அறிவித்து ஜம்மியத்துல் உலமா வரலாற்று தவறை செய்து விட்டது.



- இனாமுல்லாஹ் மஸிஹுதீன்-

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா நிகாப் விவகாரத்தில் குறிப்பிட்ட ஒரு மத்ஹப் அல்லது அமைப்பின் நிலைப்பாட்டை பொதுமைப் படுத்தி தீர்மானம் (2007) எடுத்தமை ஒரு வரலாற்று/ இஜ்திஹாத் தவறாகும்.

மாற்றுக் கருத்தை மதிக்க வேண்டும் என (2009) ஜம்மியத்துல் உலமா எடுத்த சரியான முடிவின்படி தெளிவான ஒரு முடிவை 2016 இல் வெளியிடுவதில் எந்த தவறும் இருக்க முடியாது.

இலங்கையில் ஷாபியி மத்ஹபின் பிரபலமான கருத்தை தொண்டு தொட்டு உலமாக்கள் பின்பற்றி வந்துள்ளார்கள், உலகிலும் கணிசமான பகுதியினர் பின்பற்றுகின்றார்கள்.

இந்த விடயத்தில் நான் உடன்படா விட்டாலும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடனும் அதில் அங்கத்துவம் பெற்றுள்ள குறிப்பிட்ட மத்ஹப் மற்றும் அமைப்பு சார்ந்தவர்களுடன் வாதப் பிரதி வாதங்களில் ஈடுபட விரும்பவில்லை, மாற்றுக் கருத்து உடையாரை மட்டராகமாக விமர்சிப்பதை உடனடியாக நிறுத்துமாறு ஜம்மியத்துல் உலமா உலமாக்களை அறிவுறுத்த வேண்டும்.

இன்னும் ஒரு மஜ்லிஸுல் பிக்ஹ் தோன்றுவதற்கு எந்தவொரு தரப்பும் காரணமாக இருந்துவிடக் கூடாது.

அதேபோல் ஏனைய அமைப்புக்களும் தமது அங்கத்தவர்களை அறிவுறுத்த வேண்டும்.


அதேவேளை நிகாப் அணிவதற்கு விரும்பும் ஒரு சாராரின் உரிமை மதிக்கப் படுவதோடு அதற்கு தடை கொண்டு வரப்படுவதற்கு நாம் இடமளிக்கவும் முடியாது.
முகம் மூடுவது கட்டாயம் என அறிவித்து ஜம்மியத்துல் உலமா வரலாற்று தவறை செய்து விட்டது. முகம் மூடுவது கட்டாயம் என அறிவித்து ஜம்மியத்துல் உலமா வரலாற்று தவறை செய்து விட்டது. Reviewed by Madawala News on 10/07/2016 07:51:00 PM Rating: 5