Ad Space Available here

இலங்கையில் முதல் முஸ்லிம் பெண் பொலிஸ் லைலா பஃக்கீரின் அனுபவங்கள். i


- கலா­பூ­ஷணம் 
எஸ்.ஐ. நாகூர்­கனி -

“பொலிஸ் பிரிவில் நிய­மனம் கிடைத்து பயிற்­சியும் பெற்று தொழில் துவங்­கிய ஆரம்ப காலத்தில், பொதுவில் பெண்கள் பயப்­படும் ஓரி­டத்­திற்கு, ‘பெண்கள் புதிய ஆட்கள்’ என்­றெல்லாம் பாராமல், என்­னையும் - இன்­னொரு பெண் பொலி­ஸையும் இரவு நேரத்தில் காவல் காக்க, ஓ.ஐ.ஸி பெரியார் கட்­டளைப் பிறப்­பித்தார். “கடமை” என வந்­து­விட்டால், போய்த்­தானே ஆக­வேண்டும்! அங்கே போனோம் காவல் காத்தோம். அது… எந்த இடம் தெரி­யுமா?”
“அது – கொழும்பில் கேரி கொலேஜ்­ஜுக்குப் பக்­கத்­தி­லுள்ள, கொழும்பு பெரிய ஆஸ்­பத்­தி­ரியின் சவச்­சாலை பிரே­தங்­களை வைத்­தி­ருக்கும் அறை ‘மோச்­சரி ரூம்’. இளம் பெண்­க­ளான எமக்கு எப்­படி இருந்­தி­ருக்கும்?”

“நானொரு முஸ்லிம். அல்லாஹ் நம்­மோடு இருக்­கிறான் - ஏன் பயப்­பட வேண்டும்? என்ற துணிவில், அருள்­மறை அல்­குர்­ஆனை எடுத்துக் கொண்டு, தினமும் - இரவு கட­மைக்கு ‘மோச்­சரி ரூமை’ காவல் புரிய சென்றேன்…. இது என் வாழ்வில் மறக்­க­ இயலாத சம்­பவம் அனு­பவம்” எனத் தன் தொழிற்­கால அனு­ப­வங்­களை இரை­மீட்டி, மகிழ்ச்சி கலந்த நெகிழ்ச்­சியை நம்­மோடு பகிர்ந்து கொள்ளும்

இவர் யார்?இவர்தான்…
இலங்­கையின் முதல் முஸ்லிம் பெண் பொலி­ஸாக (கான்ஸ்­டபிள்) 1953ல் நிய­மனம் பெற்று, 27 வரு­டங்கள் சேவை­யாற்றி, 1980ல் ஓய்­வு­பெற்ற ஜனாபா லைலா பஃக்கீர் என்­ப­வ­ராவார்.

இந்­நாட்டில் பொலிஸ் பிரிவு ஆரம்­பிக்­கப்­பட்டு, 150 வருட நிறைவு விழா (1866 – 2016) அண்­மையில் கொண்­டா­டப்­பட்­டமை யாவரும் அறிந்­ததே.

‘இந்தப் பொலிஸில் நம் முஸ்­லிம்­களின் பங்­க­ளிப்பு – அதா­வது வகி­பாகம் எத்­த­கை­யது?’ இதனை அறியும் ஆவலில் தக­வல்­களை தேடும் பணியில் ஈடு­ப­ட­லானேன். அப்­போது கடந்த செப்­டம்பர் மாதம் 04ஆம் தேதிய “லங்கா தீப”வின் ஞாயிறு இதழை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்­தது. தேடிப் போன முயல் காலில் வந்து சிக்­கிய மகிழ்வில், மேற்­படி இதழின் பக்­கங்­களைப் புரட்­டினேன். அதில் “லைலா”வின் கதை இருந்­தது. ஆம்… இதுவும் இன்­னொரு “லைலா – மஜ்னு” கதைதான்!

அது என்ன “லைலா – மஜ்னு” கதை என்­கி­றீர்­களா?

உலகக் காவி­ய­மான “லைலா – மஜ்னு” கதையில், லைலா மீது அவ­ளது காதலன் கயாஸ் வரம்­பு­மீறி விருப்பம் கொண்ட காதல் சித்­த­ரிக்­கப்­பட்­டுள்­ளதை வாசித்தோம். நமது பொலிஸ் வர­லாற்றில் தன் சமூ­கத்தில் எந்­த­வொரு பெண்ணும் பொலிஸ் வேலைக்கு முன்­வ­ராத நிலையில், தான் செய்து வந்த ஆசி­ரிய வேலை­யையும் உத­றி­விட்டு, முதன் முதல் பொலிஸ் வேலையை விரும்பி ஏற்ற காதல் கதை கண்­முன்னே நடை­பெற்­றி­ருக்­கி­றது. ‘அளவு கடந்து விரும்­பிய’ கோணத்தில், இரண்டு கதை­க­ளுமே நமக்கு “லைலா – மஜ்­னு”தான் லைலாவின் கதைதான்

நமது லைலாவின் கதைதான் என்ன? இதோ அந்தக் கதை…
நம் நாட்டில் பொலிஸ் பிரிவு கடந்த 03.09.1866ல் தான் ஆரம்­பிக்­கப்­பட்­டது. கடந்த செப்­டம்பர் 03ம் திக­தி­யுடன் 150 வரு­டங்கள் நிறை­வு­று­கின்­றன. நிறைவு விழா கொண்­டா­டினோம்.

சுதந்­தி­ரத்­திற்கு முன் ஆரம்­ப­மான பொலிஸ் பிரிவு, அப்­போ­தெல்லாம் வெள்­ளையர் கையி­லேயே இருந்து வந்­தது. 1946ல் தான் - அதா­வது 80 வரு­டங்­க­ளுக்குப் பின்னர் தான் முதல் இலங்­கையர் ஒருவர் பொலிஸ் அதி­கா­ரி­யாக நிய­மனம் பெற்றார். அவர்தான் ரிச்சர்ட் அலு­வி­ஹார என்­பவர்.

ரிச்சர்ட் அலு­வி­ஹார என்­ப­வரே, 1952ல் பெண்­க­ளையும் பொலிஸ் பிரிவில் இணைத்துக் கொள்ளும் திட்­டத்தைப் பிரே­ரித்தார். இத்­திட்டம் நன்கு அலசி ஆரா­யப்­பட்டு 1953ல் அமு­லுக்கு வந்­தது.

பிரஸ்­தாப திட்­டத்தின் அமு­லாக்க முயற்­சியில், முதலில் பத்­தி­ரி­கை­களில் “பொலிஸ் பிரிவில் பெண்­களும் இணைய ஆட்­சேர்ப்பு” விளம்­பரம் செய்­யப்­பட்­டது. விளம்­ப­ரத்தின் விளைவாய் வந்த விண்­ணப்­பங்­களில் நால்வர் மட்­டுமே பொருத்­த­மா­ன­வர்­க­ளாக நேர்­முகப் பரீட்­சைக்கு அழைக்­கப்­பட்டு தெரிவு செய்­யப்­பட்­டனர்.

அந்­நால்­வரில் இரண்டாம் இலக்கம் தரப்­பட்டு தெரிவு செய்­யப்­பட்­டவர் ஒரு முஸ்லிம் பெண். அவர்தான் லைலா பஃக்கீர் ஆவார். மற்ற மூவரும் ஹேமா குண­வர்­தன ஜெனிட்டா பெரேரா லெனோரல் என்­ப­வர்­க­ளாவர்.

மாத்­தறை மாவட்டம் வெலி­க­மையில் 22.02.1930ல் சம்­சுதீன் பஃக்கீர் - சுன்ஜீர் என்ற மலே தம்­ப­தி­ய­ருக்கு ஒரே மக­ளாகப் பிறந்­த­வர்தான் லைலா பஃக்கீர். இப்­போது இவ­ருக்கு வயது 87 ஆகும்.

இவ­ரது தந்தை சம்­சுதீன் பஃக்­கீரும் ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் என்­பதால், இவர்­க­ளது குடும்பம் பெரும்­பாலும் தலை­நகர் கொழும்­பிலே இருக்க வேண்டி ஏற்­பட்­டது.

அதனால் லைலா கொழும்­பி­லேயே – மரு­தானை ஆனந்தாக் கல்­லூ­ரி­யிலே படிக்­க­லானார். அப்­போ­தெல்லாம் ஆனந்தாக் கல்­லூரி ஒரு கலவன் பாட­சாலை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. பாட­சாலை வாழ்க்­கையில் இவர் சுறு­சு­றுப்­பான விளை­யாட்டு வீராங்­க­னை­யா­கவும், வலைப்­பந்­தாட்ட அணியில் விளை­யாடும் வீராங்­க­னை­யா­கவும் திகழ்ந்தார். 1949ல் பாட­சாலை வாழ்க்கை முடிந்­தது.

வாப்­பா­வுக்கு ஒரே பிள்ளை (மக­ளா­கிய) லைலாவை ஓர் ஆசி­ரி­யை­யாக ஆக்­கவே பெரிதும் விருப்பம் இருந்­தது. தந்­தையின் விருப்­பத்தை நிறை­வேற்­றவே, லைலாவும் விரும்­பினார்.

அதன்­படி ஆசி­ரி­யைக்­கான நிய­மனம் எளிதில் கிடைத்­தது. முதல் நிய­மனம் மாத்­தளை கொன்வென்ட் ஒன்­றுக்கு கிடைத்­தது. ஆங்­கிலம் படிப்­பித்தார். மாண­வியர் மீது கொள்ளைப் பிரியம் லைலா­வுக்கு. நன்கு படிப்­பித்து, நல்ல பெறு­பேற்­றி­னையும் பெற்றுக் காட்­டினார்.

சக ஆசி­ரி­யை­க­ளான ஹேமா குண­வர்­தன லைலாவின் நெருங்­கிய தோழி­யானார். ஒரு நாள் ஒரு பேப்­பரை காட்டி, அதில் வெளி­யான விளம்­ப­ர­மொன்றை வாசிக்­கும்­படி கூறினார்.

 லைலாவும் அவ்­வி­ளம்­ப­ரத்தை வாசித்தார். அது பொலிஸ் பிரி­வுக்கு பெண்­களை இணைத்துக் கொள்ளும் ஆட்­சேர்ப்­புக்­கான விளம்­பரம். “இரு­வரும் இதற்கு விண்­ணப்­பிப்போம். நமக்­கெல்லாம் பதில் வராது. வந்தால் பார்ப்போம்” என ஹேமா அன்­புடன் நச்­ச­ரிக்­கவே, தனது தந்­தையும் (சம்­சுதீன் பஃக்கீர்) ஒரு பொலிஸ்­காரர் என்­பதால், பொலிஸ் தொழிலில் ஆசை ஏற்­பட்டு, தோழி ஹேமாவும், லைலாவும் விண்­ணப்­பித்­தனர்.

என்ன ஆச்­ச­ரியம்…? ஓரிரு வாரங்­களில் பதில் நேர்­முகப் பரீட்­சைக்கு வரும்­படி அழைப்­பாக வந்­தது. லைலாவும், தோழி ஹேமா குண­வர்­த­னவும் நேர்­முகப் பரீட்­சைக்குப் போனார்கள்.

அக்­கா­லத்தில் களுத்­து­றையில் பொலிஸ் பயிற்சி பாட­சாலை இருக்­க­வில்லை. பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள டிப்போ பொலி­ஸில்தான் நேர்­முகப் பரீட்சை நடந்­தது. அங்­குதான் தோழியர் இரு­வரும் போனார்கள். அங்கே இளை­ஞர்­களும் அதி­க­மாக நேர்­முகப் பரீட்­சைக்­காக வந்­தி­ருந்­தனர். இந்தக் கூட்­டத்தில் நாங்கள் இரு­வரும் தெரி­வு­செய்­யப்­பட மாட்டோம் என்றே லைலா எண்­ணினார். ஆனால், அல்­லாஹ்வின் நாட்­டப்­படி இரு தோழி­யரும் தெரி­வா­கினர்.

பொலிஸ் நிய­மனம் கிடைக்­கும்­போது லைலா­வுக்கு வயது 23.

லைலா­வுக்கு பொலிஸ் உத்­தி­யோகம் கிடைத்த அதே காலப்­பி­ரிவில் தந்தை சம்­சுதீன் வபாத்­தானார். தந்­தையின் விருப்­பமோ மகள் ஆசி­ரி­யை­யாக பணி தொடர வேண்டும் என்­பதே அவர் தன் மகள் பொலி­ஸாக வர வேண்டும் என விரும்ப மாட்டார். அல்­லாஹ்வின் நாட்டம் போல், மகள் பொலி­ஸாக நிய­மனம் பெற, பொலிஸ்­கா­ர­ரான சம்­சுதீன் வபாத்­தானார்.

பயிற்சி ஆறு மாதம் நடந்­தது. முதலில் முத­லு­தவி - தட்­டச்சு முறை – முறைப்­பாடு பதிவு, ஊர்­வல ஒழுங்கு – போக்­கு­வ­ரத்து ஒழுங்­கு­முறை, பொலிஸின் நீதி, சட்டம் என்­பன தொடர்­பாக பயிற்சி தரப்­பட்­டது. குறி­பார்த்து சுடும் கலை­யிலும் பயிற்சி தரப்­பட்­டது. லைலா எல்­லா­வற்­றிலும் தேர்ச்சி அடைந்து சித்­தி­பெற்றார்.

பயிற்சிக் காலம் முடிய, கட­மையில் ஈடு­ப­டுத்­தினர். மரு­தானை, நார­ஹேன்­பிட்டி, வெலி­கட, கோட்டை போன்ற இடங்­களின் பொலிஸ் நிலை­யங்­களில் லைலா தன் கட­மை­களில் நேர்­மை­யாக நடந்து, பெரிய அதி­கா­ரி­க­ளிடம் நன்­ம­திப்பு பெற்றார். தட்­டச்சு வேலை இவ­ருக்கு நேர்த்­தி­யான பணி­யா­னது.

பொலிஸ் பணி இந்தச் சகோ­த­ரிக்கு மகிழ்ச்­சி­யையே தந்­தது. இப்­போது இருப்­பது போல, அள­வுக்­க­தி­க­மான வீதி விபத்­துக்கள் - போதை வஸ்து பாவ­னை­யினால் ஏற்­படும் குற்­றங்கள் - சிறுவர், பெண்கள் துஷ்­பி­ர­யோ­கங்கள் போன்ற பாரிய குற்­றச்­செ­யல்கள் அன்­றி­ருக்­க­வில்லை. பெண் பொலிஸாகிய எமக்கு நல்ல மதிப்பும் - மரியாதையும் இருந்தது.

பொலிஸ் சேவையில் 27 வருடங்கள் கடமை புரிந்து, 1980 இல் ஒய்வு பெற்ற சகோதரி லைலாவுக்கு, கடந்த 36 வருடங்களாக ஓய்வூதியம் கிடைத்து வருகின்றது. பொலிஸில் சேர்ந்தபோது, கிடைத்த முதல் மாத சம்பளம் 140 ரூபாவே என்பதில் அவர் முகம் மலர்கிறது.

பசுமையான தன் பொலிஸ் நினைவுகளுடனே ராஜகிரியவில் அமைதியாக இப்போதும் வாழ்ந்து வருகிறார் லைலா பஃக்கீர். இவருடன் தெரிவான மற்ற மூன்று பெண் பொலிஸாரும் மறைந்த நிலையில், சகோதரி லைலா மட்டுமே இறையருளால் இப்போதும் வாழ்ந்து வருகிறார். நாமும் அவரை வாழ்த்துவோம். 
இலங்கையில் முதல் முஸ்லிம் பெண் பொலிஸ் லைலா பஃக்கீரின் அனுபவங்கள். i இலங்கையில் முதல் முஸ்லிம் பெண் பொலிஸ் லைலா பஃக்கீரின் அனுபவங்கள். i Reviewed by Madawala News on 10/23/2016 06:03:00 PM Rating: 5