விமானம் புறப்படுகையில் திடீர் தீ விபத்து: விமான நிலையத்தில் பரபரப்பு i 
அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று-

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஓ’ஹரே விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 767 ரக விமானம் மியாமி நகருக்கு புறப்பட இருந்தது. 161 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகளுடன் இந்த விமானம் டேக் ஆப் செய்யவும் தீடிரென விமானத்தில் இருந்து புகை வெளிவந்தது. உடனடியாக உஷார் ஆன விமானி விமானத்தை நிறுத்தினார். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. விமானம் நிறுத்தப்பட்டதும் அவசர அவசரமாக  பயணிகள் அவசர வழியாக வெளியேற்றப்பட்டனர். 


வேகமாக வெளியேறிய போது ஏற்பட்ட நெரிசலில் 20 பயணிகள் லேசான காயம் அடைந்தனர். விமானம் தீ பற்றியதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. விமான போக்குவரத்து ஆணையமும், விமான நிறுவனமும் முரண்பட்ட தகவலை வெளியிட்டன. என்ஜின் கோளாறால் தீ பற்றியதாக ஒரு தகவலும் டயர் வெடித்ததால் தீ பற்றியதாக ஒரு தகவலும் வெளியாகியுள்ளன. 


அமெரிக்காவின் மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் ஒன்றான ஓ’ஹரே விமான நிலையத்தில் இந்த சம்பவத்தால் விமான சேவையில் லேசான பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. விபத்துக்குள்ளான விமானத்தின் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலமாக மாலையில் மியாமி நகருக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
விமானம் புறப்படுகையில் திடீர் தீ விபத்து: விமான நிலையத்தில் பரபரப்பு i விமானம் புறப்படுகையில் திடீர் தீ விபத்து: விமான நிலையத்தில் பரபரப்பு i Reviewed by Madawala News on 10/29/2016 04:22:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.