அமெரிக்க புலனாய்வு அமைப்பின் திடீர் முடிவால் ஹிலாரி கிளின்டன் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறி i



 

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

அமெரிக்க ஜனாதிபதி  தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அந்நாட்டு புலனாய்வு அமைப்பான FBI, ஜனாதிபதி  வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் மீதான இ-மெயில் வழக்கை மீண்டும் கையில் எடுத்துள்ளது. இந்த திடீர் நடவடிக்கையால் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

உலகமே எதிர்நோக்கி இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி   தேர்தல் வரும் 8-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பாக ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பாக ட்ரம்ப் போட்டியிடுகின்றனர். 3 கட்ட நேரடி விவாதத்தைத் தொடர்ந்து, இருவருக்குமே வெற்றி வாய்ப்புக்கு சம அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஹிலாரியும், ட்ரம்ப்பும் ஒருவரையொரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலராக இருந்தபோது, ரகசிய அரசு தகவல்களைப் பெற தனிப்பட்ட மின்னஞ்சலை பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான கிரிமினல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய பரிந்துரைக்க போவதில்லை என அண்மையில் எப்.பி.ஐ. தெரிவித்தது. இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த ஹிலாரி கிளிண்டன், தனது தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக்கினார்.

ஆனால், ஹிலாரி கிளின்ட்டன் மீதான இ-மெயில் வழக்கை மீண்டும் கையில் எடுக்க எப்.பி.ஐ. முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திடீர் நடவடிக்கையால் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், இந்த பிரச்சினை ஹிலாரி கிளிண்டனுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதோடு, ஏறுமுகத்தில் இருக்கும் அவரது வெற்றி வாய்ப்பை பாதிக்கச் செய்யும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிலாரி மீதான எப்.பி.ஐ. விசாரணை வரவேற்கத்தக்கது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எப்.பி.ஐ.  புலனாய்வு அமைப்பு மீது, தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க புலனாய்வு அமைப்பின் திடீர் முடிவால் ஹிலாரி கிளின்டன் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறி i அமெரிக்க புலனாய்வு அமைப்பின் திடீர் முடிவால் ஹிலாரி கிளின்டன் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறி i Reviewed by Madawala News on 10/31/2016 06:45:00 PM Rating: 5