இந்திய, பாகிஸ்தான் தூதரக அதிகாரி முகம்மது அக்தர் இந்திய ராணுவ ரகசியங்களுடன் பிடிபட்டார்.



- திருச்சி : ஷாகுல் ஹமீத் -

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பாகிஸ்தானைச்சேர்ந்த  அதிகாரிகள் பலர் பணியாற்றி வருகின்றனர்.  இந்த நிலையில், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த  முகம்மது அக்தர் என்ற அதிகாரி,  பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை திருடியதாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் தூதருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் முகமது அக்தர் (வயது 35) இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்ப்பதாக ரகசிய தகவல் வெளியானது. இதையடுத்து அவரது செயல்பாடுகளை கடந்த ஒரு வார காலமாக உளவுத்துறை கண்காணித்து வந்தது. இதில் அவர் மீதான சந்தேகம் ஊர்ஜிதமாகியுள்ளது.

இதையடுத்து அவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இந்திய ராணுவ தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் இருந்ததாகவும் தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை அனுப்பியுள்ளனர். உள்துறை மந்திரி மற்றும் கவர்னர் ஆகியோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்துத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் உளவுப்பிரிவுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள சில அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை, பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து எல்லையோர ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய, பாகிஸ்தான் தூதரக அதிகாரி முகம்மது அக்தர் இந்திய ராணுவ ரகசியங்களுடன் பிடிபட்டார். இந்திய, பாகிஸ்தான் தூதரக அதிகாரி முகம்மது அக்தர் இந்திய ராணுவ ரகசியங்களுடன் பிடிபட்டார். Reviewed by Madawala News on 10/27/2016 11:36:00 AM Rating: 5