Accaddemy

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கான இந்திய ஆலோசகர்கள், இணைப்பாளர் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினால் நியமனம்.



உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கான இந்திய ஆலோசகர்கள் இருவரும் இணைப்பாளர் ஒருவரும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 09. 10. 2016 அன்று சென்னை ஐ,ஏ.எஸ் அகடமி மண்டபத்தில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பாக தமிழக எழுத்தாளர்களுடனான சந்திப்பின் போதே இது பற்றி
அறிவிக்கப்பட்டது.

அன்றைய நிகழ்வுக்குத் தலைமை வகித்த பன்னபாட்டு இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவரும் பேராசிரியருமான சேமுமு. முகமதலி அவர்களும் பேராசிரியர் அகமது  மரைக்காயர் அவர்களும் மாநாட்டு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். மாநாடு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் மாநாட்டு இணைப்பாளராக கவிஞர் ஜலாலுத்தீன்
நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்களுக்கான உத்தியோகபூர்வக் கடிதங்களை இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் பொதுச் செயலாளரும் மாநாட்டுச் செயலாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன், பொருளாளர் நாச்சியாதீவு பர்வீன் ஆகியோரும்  மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல முக்கிய இலக்கியப் படைப்பாளிகளும் தமிழறிஞர்களும் கலந்து கொண்டனர்.

பேரா. சேமுமு. முகமதலி



பேரா. அகமது மரைக்காயர்


கவிஞர் ஜலாலுத்தீன்



உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கான இந்திய ஆலோசகர்கள், இணைப்பாளர் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினால் நியமனம். உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கான இந்திய ஆலோசகர்கள், இணைப்பாளர் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினால் நியமனம். Reviewed by Madawala News on 10/14/2016 10:47:00 PM Rating: 5