இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினர் சிங்கப்பூர் முஸ்லிம் எழுத்தாளர்கள் சந்திப்பு.



(படமும் தகவலும் -நாச்சியாதீவு பர்வீன் )

எதிர்வரும் டிசம்பர் மாதம் 10,11,12 ஆம் திகதிகளில் இலங்கை, கொழும்பில் நடைபெறவுள்ள இஸ்லாமிய இலக்கிய பொன்விழா தொடர்பாக கலந்துறையாடுமுகமாக இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினர் சிங்கப்பூர் முஸ்லிம் எழுத்தாளர்களை 06/10/2016 அன்று சந்தித்தனர்.

இந்த நிகழ்வை சிங்கப்பூர் எழுத்தாளர் ஷாநவாஸ் காயத்திரி ரெஸ்ட்வரன்டில் ஏற்பாடு செய்திருந்தார். சிங்கப்பூர் முஸ்லிம் எழுத்தாளர்கள் சார்பில் மூத்த எழுத்தாளர் ஜே.எம்.சாலி,ஷாநவாஸ்,எம்.இல்யாஸ்,நஸீர் அஹமட்,சதகதுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் சார்பில் ஆய்வகத்தின் தலைவர் காப்பியக்கோ ஜின்னாஹ் சரீப்தீன், ஆய்வகத்தின் பொதுச்செயலாளர் அஸ்ரப் சிஹாப்தீன், பொருளாளர் நாச்சியாதீவு பர்வீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினர் சிங்கப்பூர் முஸ்லிம் எழுத்தாளர்கள் சந்திப்பு. இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினர் சிங்கப்பூர் முஸ்லிம் எழுத்தாளர்கள் சந்திப்பு. Reviewed by Madawala News on 10/06/2016 08:13:00 AM Rating: 5