Free Space

மாணவர்கள் சுடப்பட்ட இடத்தில் வெற்றுத் தோட்டா தேடும் விசேட பொலிஸார்.



பாறுக் ஷிஹான்

பல்கலைக்கழக மாணவர்கள் சுடப்பட்ட இடத்தில்  தோட்டாவின் வெற்றுகோதினை தேடும் பணியில் விசேட தடவவியல் (சோகோ) பொலிஸார்   ஈடுபட்டுள்ளனர்

இன்று(26)  காலை  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திற்கு அருகில்    பொலிசாரினால் இப்பணி  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் - கொக்குவில் குளப்பிட்டிச்சந்தியில் வைத்து கடந்த 21ஆம் திகதி வியழக்கிழமை இரவு 11.30 அளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்

 இச்சம்பவம் தொடர்பாக  ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களை கைதுசெய்யப்பட்டு  தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய விசேட பொலிஸார்  சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனால் இப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் சில வெற்றுத் தோட்டாக்களும் மீட்கப்பட்டு வருகின்றது.







மாணவர்கள் சுடப்பட்ட இடத்தில் வெற்றுத் தோட்டா தேடும் விசேட பொலிஸார். மாணவர்கள் சுடப்பட்ட இடத்தில் வெற்றுத் தோட்டா  தேடும் விசேட பொலிஸார். Reviewed by Madawala News on 10/26/2016 10:00:00 AM Rating: 5