Accaddemy

பல்துறை சார் வல்லுனர்களை உருவாக்கிய கல்முனை இல்யாஸ் மாஸ்டர் காலமானார்.



ஜனாஸா அறிவித்தல்

கல்முனைப் பிரதேசத்தில் இஸ்லாமிய மார்க்க பணிக்கு பெரும்பங்களிப்புச் செய்த ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் செய்னுதீன் (இல்யாஸ் மாஸ்டர்) இன்று(7) நன்பகல் காலமானார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜீஹூன்.

சமூகப் பணியிலும் மார்க்கப் பணியிலும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த அன்னார் கல்முனைப் பிரதேசத்தின் பல பாடசாலைகளில் ஆங்கில மொழிப் பாட ஆசிரியராக பல்லாண்டு காலம் பணிபுரிந்தவர். கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த துறைசார் நிபுணர்களின் உருவாக்கத்திலும் அவர் ஆற்றிய பங்கு பாராட்டத்தக்கது.

அன்னாரின் ஜனாஸா நாளை காலை கல்முனையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

பல்துறை சார் வல்லுனர்களை உருவாக்கிய அத்தகைய நல்லாசானின் மறுவுலக வாழ்வு சுபிட்ஷமிக்கதாக வேண்டும் என்பதோடு  வல்ல அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌஷ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தை அன்னாருக்கு வழங்குவானாக என அண்ணாரின் பழைய மாணவர்கள் பிரார்த்திக்கின்றனர்.

எம்.எம்.ஏ.ஸமட்

பல்துறை சார் வல்லுனர்களை உருவாக்கிய கல்முனை இல்யாஸ் மாஸ்டர் காலமானார். பல்துறை சார் வல்லுனர்களை உருவாக்கிய கல்முனை இல்யாஸ் மாஸ்டர் காலமானார். Reviewed by Madawala News on 10/07/2016 03:36:00 PM Rating: 5