Oceas

மருதமுனை யுவதியை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு மறைந்த இளைஞன். யுவதி உயிரிழப்பு.



மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட யுவதி ஒருவர் உயிரிழந்தது தொடர்பில் இளைஞர் ஒருவரை தேடிவருவதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இனந்தெரியாத இளைஞனால் நேற்று வியாழக்கிழமை மாலை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட யுவதி ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி மருதமுனை பகுதியை சேர்ந்தவர் எனவும், இவரை ஒருவர் அழைத்துவந்து கல்லா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்திருந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குறித்த யுவதியின் சகோதரனால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த இளைஞன் நேற்று களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில், குறித்த யுவதியை அனுமதித்துவிட்டு, தான் பயணித்த காரை வைத்தியசாலை வளாகத்தில் விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குறித்த இளைஞனை தேடிவருவதாகவும் குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனையின் பின்னரே தெரியவரும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மருதமுனை யுவதியை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு மறைந்த இளைஞன். யுவதி உயிரிழப்பு.  மருதமுனை யுவதியை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு மறைந்த இளைஞன். யுவதி உயிரிழப்பு. Reviewed by Madawala News on 10/14/2016 02:18:00 PM Rating: 5