(வீடியோ இணைப்பு) மகளின் திருமணத்திற்கு LCD வீடியோ திரையுடன் கூடிய ஆடம்பர திருமண அழைப்பிதழ் கொடுக்கும் முன்னாள் அமைச்சர்.



இந்தியா:
கர்நாடக செல்வந்தர் ஒருவரது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழ் எல்சிடி  திரையுடன் ஒட்டு மொத்த மக்களையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்க தொழில் அதிபருமான ஜனார்தனன் ரெட்டிதனது மகள் திருமணத்திற்காக இந்த அழைப்பிதழை உருவாக்கியவர், இவரை தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தி கூற வேண்டுமெனில் ரெட்டி சகோதர்கள் என்றால் பிரசித்தம். கர்நாடகாவின் ரெட்டி சகோதரர்களில் ஒருவர் தான் இந்த ஜனார்தன் ரெட்டி.

ஜனார்தன் ரெட்டியின் மகளுக்கு நவம்பர் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது, திருமணத்திற்கு அழைக்க இவர் ஒரு அழைப்பிதழ் பெட்டியையே கொடுத்து வருகிறார். அப்பெட்டியை திறந்தவுடன் அதில் ஒரு எல்சிடி திரையில் ஒரு நிமிடத்திற்கும் அதிகமாக ஓடும் ஒரு வீடியோ தோன்றுகிறது, அதில் ஒரு பிரத்யேக பாட்டு ஒளிபரப்பாகிறது, அதில் ரெட்டி, அவரின் மனைவி, மகன், மற்றும் மணப்பெண், மனமகண் ஆகியோர் தோன்றி திருமணத்திற்கு அழைக்கிறார்கள்.

எல்.சி.டி திரையில் வீடியோ மூலம் திருமணத்திற்கு அழைப்பு விடுப்பது தொழில்நுட்பம் மற்றும் ஆடம்பரத்தின் வெளிப்பாடாகவே கருதப்பட்டாலும், அழைப்பிதழிலேயே இப்படியென்றால் திருமணத்தில் என்னென்ன பிரம்மாண்டங்கள் இருக்கின்றனவோ என வியக்கும்படி உள்ளது.



Image result for janardhana reddy
(வீடியோ இணைப்பு) மகளின் திருமணத்திற்கு LCD வீடியோ திரையுடன் கூடிய ஆடம்பர திருமண அழைப்பிதழ் கொடுக்கும் முன்னாள் அமைச்சர். (வீடியோ இணைப்பு) மகளின் திருமணத்திற்கு LCD வீடியோ திரையுடன் கூடிய ஆடம்பர திருமண அழைப்பிதழ் கொடுக்கும் முன்னாள் அமைச்சர். Reviewed by Madawala News on 10/20/2016 11:47:00 AM Rating: 5