Free Space

மடவளை பலத்தொட்டு ஓயா பிரயோசனமற்ற நீர்பாசன அணையால் சுகாதார சீர்கேடு. இதனை அகற்ற யாரும் இல்லையா?



(ஜே.எம்.ஹாபீஸ்)

வத்துகாமம் –  கண்டி பிரதான வீதியில் மடவளையில் இருந்து ஹபுகஸ்தென்னை / மலைவீடு  பகுதிக்குச் செல்லும் பாதைக்கு குறுக்காகப் போடப்பட்டுள்ள பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த நீர்பாசன அணை ஒன்று சுமார் 30 வருடங்களுக்கு முன்  உடைக்கப்பட்டு பாதியில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.

இதன் காரணமாக பலதொட்டஓயா நீர் கீழ் நோக்கி அடித்துச் செல்ல முடியாத நிலையில் தேங்கி இருப்பதோடு கழிவுகளும் சேர்ந்து காணப்படுகிறது.

இதனால் சுற்றாடல் அசுத்த மடைந்து, நுளம்புகள் உருவாகி நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது.   இதனை உடைத்து சிற்றோடை நீர் வழிந்தோட வழிசமைக்குமாறு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதும் அவை புறக்கணிக்கப்பட்டு வருவதாக அயலிலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.


நீரை திசை திருப்பி விவசாயம் செய்யக் கூடிய எக்காணிகளும் இப்பிரதேசத்தில் தற்போது இல்லாத நிலையில் குடியிருப்புகளுக்கு இது ஒரு சுகாதார அச்சுறுத்தலாக  இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

மடவளை பலத்தொட்டு ஓயா பிரயோசனமற்ற நீர்பாசன அணையால் சுகாதார சீர்கேடு. இதனை அகற்ற யாரும் இல்லையா? மடவளை பலத்தொட்டு ஓயா பிரயோசனமற்ற  நீர்பாசன அணையால் சுகாதார சீர்கேடு. இதனை அகற்ற யாரும் இல்லையா? Reviewed by Madawala News on 10/02/2016 09:40:00 AM Rating: 5