Free Space

(படங்கள்) அனைத்து வான் கதவுகளும் திறக்கபட்ட பொல்கொல்லை மகவெலி நீர்த்தேக்கம்.



-ஜே.எம்.ஹபீஸ்-

அவசர  திருத்த வேலை காரணமாக பொல்கொல்லை நீர் தேக்கத்தின்  அனைத்து வான் கதவுகளும் (09 ம் திகதி இரவு 10 மணி முதல்)  திறக்கப்பட்டுள்ளன.

திங்கட் கிழமை காலையில் நீர் தேக்கத்தில் தேங்கிய நீர் முற்றாக வழிந்துள்ளது. இதன் காரணமாக வழமைக்கு மாற்றமான மகாவலிகங்கையைக் காண முடிகிறது. பலர் பொழுது போக்காக  மீன் பிடிப்பதை கானக் கூடியதாக இருந்தது.


வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக  கண்டி பிரதேசத குடிநிர் வினியொகம் தடைப்பட்டுள்ளது. 36 மணி நேர நீர் வெட்டும் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

பொல்கொல்லை நீர் தேக்கம் நீண்ட காலத்திற்கு பிறகு நீரற்ற நிலையில் தற்போது காணப்படுகிறது.

செவ்வாய் கிழமை வரை காலை 10 மணிவரை இவ்வாறு திருத்த வேலைகளுக்காக நீர் திறந்து விடப்பட்டிருக்கும்.


(படங்கள்) அனைத்து வான் கதவுகளும் திறக்கபட்ட பொல்கொல்லை மகவெலி நீர்த்தேக்கம். (படங்கள்)  அனைத்து வான் கதவுகளும் திறக்கபட்ட  பொல்கொல்லை மகவெலி நீர்த்தேக்கம்.  Reviewed by Madawala News on 10/10/2016 01:26:00 PM Rating: 5