Accaddemy

மட்டக்குளி துப்பாக்கி பிரயோகம்.. காரணங்கள் வெளியானது.



இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு கொலைகள் காரணமாகவே
மட்டக்குளி – சமிட்புர பிரதேசத்தில் இரண்டு பாதள குழுக்கள் இடையே மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் சிரேஸ்ட்ட காவற்துறை அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார்.

உக்குவா என்ற பாதள குழுவின் தலைவரின் குழுவொன்றினால், மோதலில் ஈடுபட்ட மற்றைய பாதள குழுவின் தலைவரான குடு ரொஸான் என்பரின் தந்தை மூன்று வருடங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் குடு ரொஸான் என்பவரினால், உக்குவா என அழைக்கப்படும் நபரின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த நபர்கள் நேற்று மாலை எல்லே விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று அங்கு சிலருடன் பிரச்சினை ஏற்படுத்தி உள்ளனர். பின்னர் முச்சக்கர வண்டி மற்றும் மற்றுமொரு வாகனத்தில் திரும்பும் வழியிலே மட்டக்குளி – சமிட்புர பிரதேசத்தில் பாதள குழுக்கள் இரண்டுக்கு இடையில் நேற்று இரவு துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

பதாள குழுவின் தலைவரான குடு ரொஸான் உட்பட அவரின் குழுவினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், உக்குவா மற்றும் அவரின் கூட்டாளிகள் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த 4 பேரும் 24 தொடக்கம் 29 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த 3 பேர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.

தற்போது இந்த விசாரணை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பங்குகொண்ட அனைத்து பாதாள உலக நபர்களும் ஒரு காலத்தில் முக்கிய அரசியல் வாதி ஒருவரின் அடியாட்கள் எனவும் அவரின் இறப்புக்கு பிறகு குழுக்களாக பிரிந்துள்ளனர் எனவும் இவர்கள் பிரபல பாதாள உலக தலைவர்களான ஆமி சம்பத், தெமட்டகொட சமிந்த ஆகியோரின்   நெருங்கிய சகாக்கள் எனவும்  தெரிவிக்கபடுகிறது.
மட்டக்குளி துப்பாக்கி பிரயோகம்.. காரணங்கள் வெளியானது. மட்டக்குளி துப்பாக்கி பிரயோகம்.. காரணங்கள் வெளியானது. Reviewed by Madawala News on 10/24/2016 02:17:00 PM Rating: 5