மட்டக்குளி துப்பாக்கி சூட்டில் சிகிச்சை பெற்று வந்து, இன்று உயிரிழந்தவர் இவர்தான்.



மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு, மட்டக்குளி சுமித்புர பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நால்வர் பலியாகியதோடு இருவர் காயமடைந்து நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அதில் சுமார் 30 வயதுடைய ராஜ் கிரிஷான் என்ற நபரே  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று உயிரிழந்த நபர், சம்பத்ஹில் உயிரிழந்த குடு சூட்டியின் போதைப்பொருள் வர்த்தகத்தில் நெருங்கிய சம்பந்தம் உள்ளவர் என தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்குளி துப்பாக்கி சூட்டில் சிகிச்சை பெற்று வந்து, இன்று உயிரிழந்தவர் இவர்தான். மட்டக்குளி துப்பாக்கி சூட்டில்  சிகிச்சை பெற்று வந்து, இன்று உயிரிழந்தவர் இவர்தான். Reviewed by Madawala News on 10/31/2016 10:47:00 AM Rating: 5