Ad Space Available here

மியன்மாரில் பள்ளிகளையும் மத்ரஸாக்களையும் இடித்து தள்ள திட்டம்.எம்.ஐ.அப்துல் நஸார்

மியன்­மாரில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்ற மொங்டௌ மற்றும் புதிடொங் ஆகிய நக­ரங்­க­ளி­லுள்ள பள்­ளி­வா­யல்கள் மத்­ர­ஸாக்கள் உள்­ளிட்ட நூற்­றுக்­க­ணக்­கான கட்­ட­டங்­களை இடிப்­ப­தற்கு மியன்­மாரின் ராகின் மாநில அர­சாங்க உய­ர­தி­கா­ரிகள் குழு திட்­ட­மிட்­டுள்­ளது.

'சட்­டத்­திற்­க­மை­வாக அனு­மதி பெறப்­ப­டாது கட்­டப்­பட்­டுள்ள பள்­ளி­வா­யல்கள் மற்றும் ஏனைய கட்­ட­டங்கள் தொடர்பில் மதிப்­பீட்­டினைச் செய்­து­வ­ரு­கின்றோம்' என ராகின் மாநில எல்லைப் பாது­காப்பு விவ­கார அமைச்சர் கேணல் டியின் லின் கடந்த புதன் கிழமை உள்ளூர் ஊட­க­மொன்­றிற்குத் தெரி­வித்தார்.


வொய்ஸ் ஒப் அமெ­ரிக்கா பர்­மிய வானொலி சேவைக்கு அமைச்­சரின் அலு­வ­லக அதி­கா­ரி­யொ­ருவர் கருத்துத் தெரி­விக்­கையில், ஆங் சான் சுகியின் தலை­மை­யி­லேயே இவ்­வா­றான சட்­ட­வி­ரோத கட்ட­டங்கள் அகற்­றப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­வித்தார்.

ஒன்­பது பள்­ளி­வா­யல்கள் மற்றும் 24 மத்­ர­ஸாக்கள் உள்­ளிட்ட 2,270 சட்­ட­வி­ரோதக் கட்­ட­டங்கள் மொக்­டௌவில் காணப்­படும் அதே­வேளை புதி­டொ­ங்கில் மூன்று பள்­ளி­வா­யல்கள் மற்றும் 11 மத­்ர­ஸாக்கள் உள்­ளிட்ட 1,056 சட்­ட­வி­ரோதக் கட்­ட­டங்­களும் காணப்­ப­டு­வ­தாக அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.


மியன்­மாரின் மிகவும் வறு­மை­யான மாநி­ல­மான ராகினில் சுமார் 125,000 ரொஹிங்­கிய முஸ்­லிம்கள் வாழ்­கின்­றனர். 2012 ஆம் ஆண்டு பௌத்­தர்­க­ளுக்கும் இவர்க­ளுக்கும் இடையே ஏற்­பட்ட வன்­மு­றை­களைத் தொடர்ந்து இவர்­களுள் பெரும்­பான்­மை­யினர் தற்­கா­லிக முகாம்­க­ளுக்குள் தம்மை முடக்கிக் கொண்­டுள்­ளனர்.

பங்­க­ளா­தே­ஷி­லி­ருந்து புலம் பெயர்ந்து சட்­ட­வி­ரோ­த­மாக மியன்­மாரில் பல தலை­மு­றை­க­ளாக அவர்கள் வாழ்­வ­தாக பெரும்­பான்­யி­ன­ரான பௌத்­தர்கள் நம்­பு­கின்­றனர். 2011 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்­சிக்கு வந்த இரா­ணுவ அர­சாங்கம் முஸ்­லிம்­க­ளுக்கு எதிரான பிரச்­சா­ரங்­க­ளுக்கும் செயற்­பா­டு­க­ளுக்கும் கடி­வா­ள­மிடத் தவ­றி­விட்­டது.

மியன்மார் என அழைக்­கப்­படும் பர்­மாவில் முதன் முறை­யாக இரா­ணுவ அர­சாங்கம் பத­விக்கு வந்த வேளையில் 1962ஆம் ஆண்டு அந்தப் பிராந்­தி­யத்தில் பள்­ளி­வா­யல்கள் மற்றும் மத்­ர­ஸாக்­களை அமைப்­ப­தற்கு தடை விதிக்­கப்­பட்­டது.

நீண்­ட­கா­லத்­திற்கு முன்னர் மத­ரீ­தி­யான கட்­டு­மா­னங்­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தடையை திடீ­ரென நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டதன் பின்­னணி தொடர்பில் பல்­வேறு சந்­தே­கங்கள் எழுந்­துள்­ளன.

ஆங் சான் சுய்­கியின் அமெ­ரிக்க விஜ­யத்­தின்­போது 'குறிப்­பி­டத்­தக்க சமூக, அர­சியல் மாற்­றங்­க­ளினை கருத்­திற்­கொண்டு' தென்­கி­ழக்­கா­சிய நாட்டின் மீது விதிக்­கப்­பட்­டுள்ள பொரு­ளா­தாரத் தடை­யினை நீக்­கு­வ­தாக பராக் ஒபாமா உறு­தி­ய­ளித்தார்.

எனினும், பொரு­ளா­தாரத் தடை­யினை நீக்­கு­வ­தென்ற பராக் ஒபா­மாவின் தீர்­மானம் மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள் மத்­தியில் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யது. ஏனெனில் நீண்­ட­கா­ல­மாக ரோஹிங்­கிய மக்­க­ளுக்கு நடக்­கின்ற அநீ­திகள் தொடர்பில் அர­சாங்கம் போதிய நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை என அவர்கள் குற்றம் சுமத்தி வரு­கின்­றனர்.

நோபல் பரிசை வென்­ற­வரும் தற்­போ­தைய மியன்­மாரின் தலை­மைத்­துவப் பொறுப்பில் இருப்­ப­வ­ரு­மான சுய்­கியி கடந்த புதன் கிழமை ஐ.நா. பொதுச் சபையில் உரை­யாற்­று­கையில், மேற்கு மாநி­லத்தில் நில­வு­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தரத் தீர்வு காணப்­படும் என உறு­தி­ய­ளித்தார். எனினும், ரோஹிங்­கியா என்ற வார்த்­தை­யினை பயன்­ப­டுத்­து­வ­தனை மிகக் கவ­ன­மாகத் தவிர்த்துக் கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் பத­விக்கு வந்த அவ­ரது அர­சாங்கம் பதற்­றத்தைத் தணிக்­கு­மாறும், வன்­மு­றை­க­ளுக்கு இலக்­காகிக் கொண்­டி­ருக்­கின்ற நாடற்றோர் பிரச்­சி­னைக்கு தீர்வு காணு­மாறும் சர்­வ­தேச அழுத்­தங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றது.

'சர்­வ­தேச விசா­ர­ணை­க­ளுக்கு நாம் பயப்­ப­ட­வில்லை'  என ஐ.நா சபையில் தெரி­வித்த சுயி கியி 'மாநி­லத்தில் வாழ்­கின்ற அனைத்து மக்­க­ளையும் சமா­தானம், ஸ்திரத்­தன்மை, அபி­வி­ருத்தி நோக்கி இட்டுச் செல்­வ­தற்­கான நிலைத்து நிற்கக் கூடிய தீர்­வினைக் காண்­ப­தற்கு நாம் உறுதி பூண்­டுள்ளோம்' எனவும் தெரி­வித்தார்.

'பள்­ளி­வா­யல்­க­ளையும், மத்­ர­ஸாக்­க­ளையும் இடித்து அகற்­று­வ­தென்ற இந்தத் தீர்­மானம் தொடர்பில் உள்ளூர் முஸ்­லிம்கள் மிகவும் கவ­லை­ய­டைந்­துள்­ளனர், இது சம்­பந்­த­மாக மியன்மார் உய­ர­தி­கா­ரி­க­ளுடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர்' என ஐக்­கிய நாடுகள் சபையின் முன்னாள் செய­லாளர் கொபி அனானின் தலை­மையில் அமைக்­கப்­பட்ட ரோஹிங்­கிய பிணக்கு தொடர்­பான விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னரும் முஸ்லிம் சமூகத் தலை­வ­ரு­மான யூ எயி ல்வின், வொயிஸ் ஒப் அமெ­ரிக்கா வானொ­லிக்கு தெரி­வித்தார்.

'முஸ்லிம் சமயத் தலை­வர்கள் சமய விவ­கார யூனியன் அமைச்­சரை சந்­திப்­ப­தற்கு முயன்று வரு­கின்­றார்கள், சட்­டத்தின் படி மதச்­சு­தந்­திரம் இருக்­கின்­றது.

எனவே சமயத் தலங்கள் அதே இடங்­களில் இருக்க வேண்டும். அது மட்­டு­மல்ல புனர் நிர்­மாணம் செய்­யப்­ப­டவும் வேண்டும்' எனவும் அவர் தெரி­வித்தார்.

'இவ்­வாறு சமயக் கட்­டு­மா­னங்­களை இடித்துத் தள்­ளு­வ­தற்­கான இந்தத் திட்டம் குடி­யி­ருப்­பா­ளர்கள் மத்­தியில் கவ­லை­யினை ஏற்­ப­டுத்தும். அது­மட்­டு­மல்­லாது முஸ்லிம் தலை­வர்கள் கூட இந்தச் செயற்­பாடு மேற்கு மாநி­லத்­தி­லுள்ள பௌத்­தர்கள் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்­கி­டையே வீணான பதற்­றத்தை உரு­வாக்கும் என குறிப்­பிட்­டுள்­ளனர்' என பர்­மாவின் ஜன­நா­யகக் குரல் என்ற அமைப்­பினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

'ராகின் மாநிலம் கட்­ட­டங்­களை இடித்­த­கற்றும் பணி­களில் ஈடு­ப­டு­மானால், அது வரம்­பு­மீ­றிய செயற்­பா­டாகக் கரு­தப்­படும்' என ஆங் சாங் சுயி குயி இன் ஆளும் ஜன­நா­ய­கத்­திற்­கான தேசிய லீக்கின் பேச்­சாளர் ஒருவர் கடுந் தொனியில் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

'இவ்­வா­றான செயற்­பா­டுகள் தற்­போது அமுலில் உள்ள சட்­டங்­க­ளுக்கு முர­ணா­ன­வை­யாகும், பள்­ளி­வா­யல்­களை இடிப்­ப­தற்கு அவர்­க­ளுக்கு எவ்­வித அதி­கா­ரமும் இல்லை' என ஜன­நா­ய­கத்­திற்­கான தேசிய லீக்கின் மத்­திய குழு உறுப்­பினர் வின் டெயின் தெரி­வித்தார்.
இத­னி­டையே, 11 ரோஹிங்­கிய அமைப்­புக்கள் இணைந்து சட்­ட­வி­ரோ­த­மாக கட்­டப்­பட்­டுள்­ள­தாக ரக்­ஹினி மாநில அர­சாங்­கத்­தினால் கூறப்­படும் பள்­ளி­வா­யல்­க­ளையும், மத்­ர­ஸாக்­க­ளையும், ரோஹிங்­கிய மக்­களின் வீடு­க­ளையும் இடிக்க வேண்டாம் என அந்த மாநில அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுத்­துள்­ளன.

'சட்­ட­வி­ரோ­த­மாகக் கட்­டப்­பட்­டுள்­ள­தென்ற போர்­வையில் மொங்டௌ மற்றும் புதிடொங் ஆகிய நக­ரங்­க­ளி­லுள்ள 12 பள்­ளி­வா­யல்கள், 35 மத்­ர­ஸாக்கள் உள்­ளிட்ட 3000 இற்கும் மேற்­பட்ட ஹோஹிங்­கிய கட்­ட­டங்­களை இடிப்­ப­தற்கு ராகின் மாநில அர­சாங்கம் திட்ட­மிட்­டி­ருப்­பதை வன்­மை­யாகக் கண்­டிப்­ப­தாக' அந்த அமைப்­புக்கள் இணைந்து வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சட்­ட­வி­ரோதக் கட்­ட­டங்­களை இடித்­த­கற்­று­வது என்ற அறி­வித்தல் செப்­டம்பர் மாதம் 18 ஆம் திகதி அறி­விக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து ரோஹிங்­கிய சமூக மக்கள் அதி­ருப்தி அடைந்­துள்­ள­தோடு, இந்தத் திட்டம் பாது­காப்­பற்ற நிலை­யி­லுள்ள ரோஹிங்­கிய மக்­களை இனச்­சுத்­தி­க­ரிப்புச் செய்யும் நீண்­ட­காலத் திட்­டத்தின் ஒரு பகு­தி­யாகும் எனவும் குற்றம் சாட்­டி­யுள்­ளனர்.  

'இந்தத் திட்டம் ராகின் பிராந்­தி­யத்தில் சமா­தா­னத்­தையும் ஸ்திரத் தன்­மை­யையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களை சீர்­கு­லைத்து ஸ்திரத் தன்­மையை இல்­லா­ம­லாக்­கு­வ­தற்கு அரக்கான் (ராகின் ) மாநில அர­சாங்கம் மற்றும் ராகின் கடும்­போக்­கு­வாத பௌத்த தலை­வர்­களின் கூட்டுச் சதி­யாகும். அது மட்­டு­மல்­லாது உள்­ளக ரீதி­யாக அதி­க­மான ரோஹிங்­கிய மக்­களை இடம்­பெ­யர வைத்து மொங்டௌ மாவட்­டத்தில் அனை­வ­ரையும் ஒரே இடத்தில் குவியச் செய்து வதை முகாம்­க­ளை­யொத்த முகாம்­களை உரு­வாக்­கு­வது அவர்­க­ளது நோக்­க­மாகும்' என 11 ரோஹிங்­கிய அமைப்­புக்கள் இணைந்து வெளி­யிட்ட அறிக்­கையில் குற்றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

மியன்மார் அர­சாங்­கத்­தினால் அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­க­ளுக்கு இந்த நட­வ­டிக்­கைகள் முரண்­பட்­ட­தாகக் கவலை தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அண்மைக் கால­மாக முஸ்­லிம்கள் தொடர்­பான எதிர்ப்­பு­ணர்வு பௌத்­தர்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட பகு­தி­களில் தீவி­ர­மாகப் பரப்­பப்­ப­டு­வ­தோடு, வன்­மு­றை­களும் வெடித்­துள்­ளன. இன மோதல்கள் முக்­கிய நக­ரங்­களில் இடம்­பெற்­றுள்­ளன.

பௌத்த தேசி­ய­வாதக் குழுக்கள் இதன் பின்­ன­ணியில் இருந்­துள்­ளன. இரு சமூ­­கங்­க­ளுக்கும் இடை­யே­யான பதற்ற நிலை தற்­போது மிகவும் கூர்­மை­ய­டைந்­துள்­ளதால் சிறிய முறுகல் நிலையும் பாரிய இன மோத­லாக மாற்­ற­ம­டையும் நிலையும் இங்கு காணப்­ப­டு­கின்­றது.

கடந்த ஜுன் மாதம் மத்­திய பர்­மாவில் கட்­டப்­படும் முஸ்லிம் பாட­சா­லை­யொன்று தொடர்­பாக அய­ல­வர்­க­ளி­டையே ஏற்­பட்ட முறுகல் நிலை, காடையர் குழு­வொன்­றினால் பள்­ளி­வா­ய­லொன்று தீக்­கி­ரை­யாக்­கப்­பட்டு, டசின் கணக்­கான முஸ்­லிம்கள் உயிரைக் காப்­பாற்றிக் கொள்­வ­தற்கு தப்பி ஓட வேண்­டிய நிலைக்கும் கொண்டு சென்­றது.

இந்த சம்­பவம் நடை­பெற்று ஒரு வாரத்­திற்­குள்­ளாக நாட்டின் வடக்­கே­யுள்ள முஸ்­லிம்­களின் தொழுகை அறை­யொன்று தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டது. இந்த சம்­ப­வத்­துடன் 500 பேர் சம்­பந்­தப்­பட்­டி­ருந்­த­தாகத் தெரி­விக்­கப்­பட்ட போதிலும், ஐந்து பேர் மாத்­தி­ரமே கைது செய்­யப்­பட்­டனர்.

இவ்­வாரம், தென் கிழக்கு மியன்­மாரில் ஏற்­பட்ட மோதல்­களின் கார­ண­மாக குறைந்­தது 8 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­தா­கவும் ஆயிரக் கணக்­கானோர் இடம் பெயர்ந்­துள்­ள­தா­கவும் வயர் நியூஸ் தெரி­வித்­துள்­ளது.

இந்த சம்­ப­வங்கள் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் சமா­தான முயற்­சி­க­ளுக்கு பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

தாய்­லாந்தை எல்­லை­யாகக் கொண்ட காரீன் மாநி­லத்தில் அர­சாங்கப் படை­யி­ன­ருக்கும் DKBA என அறியப்பட்ட கிளர்ச்சிக் குழு ஒன்றுக்கும் இடையே இம் மாதம் மோதல் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்தது.
மியன்மாரில் பள்ளிகளையும் மத்ரஸாக்களையும் இடித்து தள்ள திட்டம். மியன்மாரில் பள்ளிகளையும் மத்ரஸாக்களையும் இடித்து தள்ள திட்டம். Reviewed by Madawala News on 10/02/2016 02:07:00 PM Rating: 5