Free Space

தொடரும் பாலியல் வல்லுறவு ,குர்ஆனில் சிறுநீர் கழிப்பு, கட்டாய வெளியேற்றம் கண்ணீர் விட்டழுகிற மியன்மார் முஸ்லிம்கள்.



மியான்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்களின் படுகொலைகள் ,பாலியல்  வல்லுறவுகள் ,கொள்ளைகள் ,பலவந்த வெளியேற்றங்கள் , தீவைத்து எரிப்புக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில் சர்வதேச சமுகம் தலையை திருப்பிய வண்ணம் உள்ளது .

இரு தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் தாயொருவரும் அவரது மகளும் இருவருக்கும் முன்னால் மியான்மார் படையினரால் பாலியல் வல்லுறவு படுத்தப்பட்டுள்ளனர் .

நேற்றைய தினம்  மங் டாவ் பகுதியில்  மூன்று மாத கர்ப்பிணியான முஸ்லிம் பெண் ஒருவர்  பல பர்மீய  இராணுவத்தனரால் கூட்டமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் .

கடந்த வாரம் மாத்திரம் பத்து முஸ்லிம் பெண்கள் பாலியல் வல்லுறவுப்படுத்த்க்கப்பட்ட நிலையில் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்கிற விபரம் இன்னமும் தெரிய வராமல் உள்ளது .

வன்முறைகள் காரணமாக சுமார் 15 ஆயிரம் முஸ்லிம்கள்    பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் .
பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டுள்ளன .

புனித குர் ஆண் கிதாபுகள் கிழிக்கப்பட்டு அதன் மேல் சிறுநீர் கழிக்கப்பட்டுள்ளன .

அங்குள்ள நிலை நாளுக்கு நாள் மோசமடைவதாக கூறப்படுகிறது . ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்

 உணவுப்பொருட்கள் தண்ணீர் இன்றி கடும் கஷ்டமான நிலையில உள்ளதாக அங்கிருந்து கிடைக்கிற தகவல்கள் கூறுகின்றன

உங்கள் ஒவ்வொரு தொழுகையிலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம்
பிரார்த்தணை செய்யுங்கள் .

-முஹம்மது ராஜி-
தொடரும் பாலியல் வல்லுறவு ,குர்ஆனில் சிறுநீர் கழிப்பு, கட்டாய வெளியேற்றம் கண்ணீர் விட்டழுகிற மியன்மார் முஸ்லிம்கள். தொடரும் பாலியல் வல்லுறவு ,குர்ஆனில் சிறுநீர் கழிப்பு, கட்டாய வெளியேற்றம் கண்ணீர் விட்டழுகிற மியன்மார்  முஸ்லிம்கள். Reviewed by Madawala News on 10/25/2016 11:01:00 PM Rating: 5