Accaddemy

மகனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்த தந்தை, அந்த மகனாலே அடித்துக்கொலை.



தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க தயாரான தந்தை ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று கம்பஹா மீரிகம பிரதேசத்தில் நடந்துள்ளது.

28 வயதான மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் யோசனையை முன்வைத்ததால், மகன் தந்தையை பொல்லினால் தாக்கியுள்ளார்.

அந்த தாக்குதலில் 55 வயதான தந்தை உயிரிழந்துள்ளதுடன் சந்தேகநபரான மகனை மீரிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த தந்தை வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்த தந்தை, அந்த மகனாலே அடித்துக்கொலை. மகனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்த தந்தை, அந்த மகனாலே அடித்துக்கொலை. Reviewed by Madawala News on 10/24/2016 06:45:00 PM Rating: 5