எக்காரணம் கொண்டும் பௌத்த மதம் நலிவடையும் விடயங்களுக்கு இடமளிக்க மாட்டோம். ஜனாதிபதி பேராதனையில்..



-ஜே.எம்.ஹபீஸ்-

ஊடகச் சுதந்திரம், மற்றும் ஜனநாயகச் சுதந்திரம் என்பவற்றின் அடிப்படையில் தவறான கருத்துக்கள்  முன் வைக்கப் படுகின்றனவே தவிற பௌத்த தர்மத்தை பாதிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் அரசு என்ற வகையிலோ தனிப்பட்ட வகையிலோ மேற்கொள்ளப்பட மாட்டாது என ஜனாதிபதி மைந்திரிப்பால சிரிசேனா தெரிவித்தார்.

பேராதனை கொடக்கன்தெனிய குருகுதய புரான விகாரையில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் கலந்ர் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவித்ததாவது-

பௌத்த தர்மத்தைப் பாதுகாக்க அரசியல் அமைப்பின் பிரகாரமும் தனது தனிப்பட்ட ஆளுமையூடாகவும் நடவடிக்கை எடுப்பதாகவும் பௌத்த மதத்தை எக்காரணம் கொண்டு நலிவடையக் கூடிய விடயங்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் கூறினார்.

சுமார் ஏழு மாதங்களுக்கு முன் விகாரைகள் மற்றும் தேவாலகம் சட்டத்தை முன் எடுப்பதற்கு இருந்த போது சங்கைக்குறிய தேரர்களது கருத்துக்களைப் பெறும் வகையில் அது தாமதமாக்கப்பட்டது.

ஊடகச் சுதந்திரம், மற்றும் ஜனநாயகச் சுதந்திரம் என்பவற்றின் அடிப்படையில் பல்வேறு வகையான கருத்துக்கள் பிரசாரங்கள் முன் எடுக்கப் படுகின்றன. பௌத்த தர்மத்தை அழிக்கும் வகையிலான அல்லது பௌத்த தர்மத்துக்கு உரிய இடத்தை வழங்காமல் இருப்பதற்கான ஏந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை. அவ்வாறு தவறான பிரசாரமே செய்யப்பட்டு வருகிறது. சுதந்தி கருத்துப் பரிமாறலின் விளைவாகவே அவ்வாறு நிகழ்வதாகவும் கூறினார்.


எக்காரணம் கொண்டும் பௌத்த மதம் நலிவடையும் விடயங்களுக்கு இடமளிக்க மாட்டோம். ஜனாதிபதி பேராதனையில்.. எக்காரணம் கொண்டும் பௌத்த மதம் நலிவடையும் விடயங்களுக்கு இடமளிக்க மாட்டோம். ஜனாதிபதி பேராதனையில்.. Reviewed by Madawala News on 10/05/2016 01:16:00 PM Rating: 5