Free Space

சிறுவனின் ஐஸ்கிரீம் அரசியல்வாதியின் மேல் பட்டதால் சிறுவனை போட்டுத்தாக்கிய அரசியல்வாதி... #இலங்கையில்.



சிறுவனொருவன் உண்பதற்காக வைத்திருந்த ஐஸ்கிரீமானது, அரசியல்வாதியொருவரின் உடலில் பட்டதால், ஆத்திரமடைந்த அரசியல்வாதி அச்சிறுவனை தாக்கியச் சம்பவம் கடுவலையில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பாதிப்படைந்த  11 வயது சிறுவன், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடுவெல விலத்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதியே, தனது மகனை தாக்கியதாக  சிறுவனின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளர்.  எனினும், அச்சிறுவனை தான் தாக்கவில்லை என மேற்படி அரிசயல்வாதி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவனின் ஐஸ்கிரீம் அரசியல்வாதியின் மேல் பட்டதால் சிறுவனை போட்டுத்தாக்கிய அரசியல்வாதி... #இலங்கையில். சிறுவனின் ஐஸ்கிரீம் அரசியல்வாதியின் மேல் பட்டதால் சிறுவனை போட்டுத்தாக்கிய அரசியல்வாதி... #இலங்கையில். Reviewed by Madawala News on 10/21/2016 04:05:00 PM Rating: 5