Ad Space Available here

புதிதாக புத்தர் சிலை....தழிழ், முஸ்லிம் மக்களை குழப்பும் முயற்சியில் சில தீய சக்தியினர் .r

 



 


சபீக் ஹுசைன், அபு அலா -


புதிதாக புத்தர் சிலையொன்றை பலவந்தமாக நிறுத்தி வைத்து தழிழ், முஸ்லிம் மக்களை குழப்பும் முயற்சியில் சில தீய சக்தியினர் செயற்பட்டு வருகின்றனர். இதனால் நீங்கள் ஆத்திரப்பட்டு ஆவேசத்துடன் எதுவும் செய்துவிடக்கூடாது. அதற்கான சகல நடவடிக்கைகளையும் நான் முன்னெடுத்துவருகின்றேன் அதுவரை நீங்கள் பொறுமை காத்திரிக்கும்படி அமைச்சர் றவுப் ஹக்கீம் கூறினார். 


அம்பாறை, இறக்காமம் மாணிக்கமடு பகுதியில் (29) சனிக்கிழமை புதிதாக புத்தர் சிலையொன்று பலவந்தமாக நிறுவப்பட்டமையினால் அப்பிரதேச முஸ்லிம், தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அச்சம் நிலவி வருகின்றதையடுத்து குறித்த பிரதேசத்துக்கு அமைச்சர் ஹக்கீம் நேற்று (30) விஜயமொன்றை மேற்கொண்டார்.


இறக்காமம் ஸ்ரீ மாணிக்கமடு கோயில் முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மேற்கண்டவாறு கூறினார்.


இக்கலந்துரையாடலில் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்ததாவது; 


இந்த அரசாங்கத்தை குழப்பும் முயற்சியில் சில தீய சக்தியினர் செயற்பட்டு வருகின்றனர். இந்த அரசாங்கம் உருவாக்கியதன் பிற்பாடு நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது நல்லிணக்கத்துக்கு பாதகம் விளைவிக்கக்கூடியது. சிறுபான்மை மக்களை வம்புக்கு இழுக்கின்ற சம்பவமாக இது பார்க்கப்படுகின்றது. 


இந்த விடயம் சட்டத்தையும் ஒழுங்கையும் தோற்றுவிப்பதில் குந்தகம் விளைவிக்கின்றது. நீதிமன்ற தடையையும் மீறி எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் தங்களது மதத்தை பிரதிபலிக்கும் சின்னத்தையோ அடையாளத்தையோ அனுமதியின்றி பலவந்தமாக வைப்பதென்பது முறைகேடான விடயமாகும். இவ்வாறு செய்யப்படுகின்ற வேலைகள் எல்லாம் வணக்க வழிபாட்டுக்கோ ஆராதனைக்கோ அல்ல என்பதை பொதுமக்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். இது சிறுபான்மை இனத்தவர்களை குழப்பும் செயற்பாடு என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.


நான் இது தொடர்பாக பொலிஸ்மா அதிபருடன் கதைத்துள்ளேன். பொலிஸ்மா அதிபரும் அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக வாக்குறுதியும் அளித்துள்ளார். இப்புத்தர் சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டதால் இதனை நீதிமன்றத்தினூடாக அகற்ற சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இந்த விடயத்தில் நீங்கள் பொறுமை காக்கவேண்டியது காலத்தின் தேவையாகும் என்று அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.


புதிதாக புத்தர் சிலை....தழிழ், முஸ்லிம் மக்களை குழப்பும் முயற்சியில் சில தீய சக்தியினர் .r புதிதாக புத்தர் சிலை....தழிழ், முஸ்லிம் மக்களை குழப்பும் முயற்சியில் சில தீய சக்தியினர் .r Reviewed by Madawala News on 10/31/2016 09:13:00 AM Rating: 5