மடவளை, ஹில்கன்டறி சர்வதேச பாடசாலையின் Radiant Stars



கண்டி, மடவளை, ஹில்கன்டறி சர்வதேச பாடசாலை முன்பள்ளி சிறார்களின் வருடாந்த கலை நிகழ்ச்சி (Radiant Stars)

கண்டி, மடவளை, ஹில்கன்டறி சர்வதேச பாடசாலை முன்பள்ளி சிறார்களின் (Play Group & Pre Grade) வருடாந்த கலை நிகழ்ச்சியான “Radiant Stars 2016” கடந்த 22.10.2016 அன்று மடவளை அஷ்ரப் கேட்போர் கூடத்தில் கல்லூரி அதிபர் ஜனாப் A.A.M.  ஜாஸில் தலைமையின் கீழ் வெகு விமரிசையாக நடைபெற்றது.


இவ்விழாவில் பிரதம அதிதியாக கலாநிதி எம்.டி.சியாட் மொஹம்மட், BSc Hon. (Jaffna),PhD (Sheffield UK),Director - School Development, Insight Institute of Management and Technology,Ex-Director, Tea Research Institute, Sri Lanka கலந்து சிறப்பித்தார். இவர் தனது உரையில் குழந்தை வளர்ப்பு பற்றிய கருத்துக்களை குறிப்பிட்டார். குழந்தை வளர்ப்பின் போது பெற்றோர்களின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிட்டார்.  இதில் அவர்,

1. வீட்டில் தொலைக்காட்சி பாவணையை தவிர்த்தல்.
2. ஹலாலான முறையில் சம்பாதித்தல்.
3. தாய், தந்தை தினமும் 30 நிமிடங்கள் குழந்தையுடன் செலவழித்தல்.
4. மார்க்கத்தைப் பின்பற்றல், தினமும் குர்ஆனில் 10 வசனங்கள் ஓதல்.

ஆகிய விடயங்களை முக்கியமாகக் குறிப்பிட்டார். இதன் அடிப்படையில் இவரது இரு பிள்ளைகளும் க.பொ.த. உ.த பரீட்சையில் 3A சித்திகள் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில்உரையாடல்,உரைகள்,கவிதைகள்,பொதுஅறிவுபோட்டி,நடனம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.இவை யாவும் மாணவச் சிறார்களின் திறமைகளை வெளிக்கொணரும் நிகழ்ச்சிகளாக அமைந்திருந்தன.

இவ்விழாவில் கலந்துகொண்ட பெற்றோர்கள் ஒரு வருட காலத்தில் தங்களது குழந்தைகளின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.;
இவ்விழாவின் போது பிடிக்கப்பட்ட புகைபடங்கள்; சில.

Media Unit
      HIS



மடவளை, ஹில்கன்டறி சர்வதேச பாடசாலையின் Radiant Stars மடவளை, ஹில்கன்டறி சர்வதேச பாடசாலையின் Radiant Stars Reviewed by Madawala News on 10/26/2016 11:19:00 AM Rating: 5