Free Space

(படங்கள் ) கண்டியில் ரீட்டா ஐசக்.. அனைத்து இனப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.



-ஜே.எம்.ஹபீஸ்-

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான அறிக்கையாளர் ரீட்டா ஐசக் தலைமையிலான குழுவினர் (15.10.2016) கண்டிக்கு விஜயம் செய்து மலையகத்தைச் சேர்ந்த பல்வேறு சிவில் அமைப்புக்களையும் சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

கண்டியைத் தளமாகக் கொண்டியங்கும் சமூக அபிவிருத்தி நிறுவகத்தில் தலைமைக் காரியாலயத்தில் இச்சந்திப்பு இடம் பெற்றது. பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ் விரிவுரையாளர்கள் பலரும் இதில் கலந்து கருத்து வெளியிட்டனர். மலையக சமூகத்தைப் பிரதி நிதித்துவப் படுத்தும் ஏனைய இனப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

பெருந்தோட்டத் தொழிற்சங்க வாதிகளும் இங்கு தமது கருத்துக்களை மன்வைத்தனர்.

மலையக மக்கள் இன்று எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளில் தேசிய த்துவத்தை இனம்காட்டும் பிரச்சினை பாரியதாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இலங்கையின் அபிவிருத்தி நீரோட்டத்தில் பெருந்தோட்ட தேசியம் புறக்கணிக்கப்படுவது கவலை தருவதாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

காணி உரிமையோ, விட்டுரிமையோ அற்ற ஒரு சமூகமாக வாழ்ந்து வருவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

தேர்தல் மறு சீரமைப்பு காரணமாக மலையகத்திற்கு ஏற்படப் போகும் பாதிப்புக்கள் பற்றியும் தெரிவிக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர் வேதனப்பிரச்சினையும் இங்கு மன்வைக்கப்பட்டது.

அதே நேரம் மலையகத்திற்கு வெளியே வவுனியா உற்பட வடமாகாணத்தில் வாழ்கின்ற மலையக மக்கள் மற்றும்  திருகோணமலை உற்பட கிழக்கு மாகாணம் போன்ற இடங்களிலும் வாழ்கின்ற மலையகத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் முன்வைக்கப்பட்டன.


பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.சிவகனேசன், விரிவுரையாளர்களான எஸ்.விஜயச் சந்திரன், ஆர்.ரமேஷ், உதயம் அறக்கட்டளையின் தலைவர் சந்திரா சாப்டர், தொழிற் சங்கப் பிரதி நிதிகளான முருகையா, அ.ர.நந்தகுமார், வீ.அந்தனி, உழகைகும் பெண்கள் முன்னணி சார்பாக கீசானி ஏக்கநாயக்கா,  மோகன் சுப்ரமணியம் உற்பட சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த பலர் இங்கு கருத்து வெளியிட்டனர். எழுத்து மூல அறிக்கைகளும் கையளிக்கப்பட்டன.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான அறிக்கையாளர் ரீட்டா ஐசக் தலைமையிலான குழுவினர் (15.10.2016) கண்டியைத் தளமாகக் கொண்டியங்கும் சமூக அபிவிருத்தி நிறுவகத்தில் தலைமைக் காரியாலயத்தில் மலையக சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளைச் சந்தித்து மலையக மக்களது பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடிய போது எடுக்கப்பட்ட படம்.


கலந்துரையாடலில் பங்கு கொண்ட சிவில் மற்றும் சமூக அமைப்புக்களின் தலைவர்கள் பிரதிநிதிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆகியோர் ரீட்டா ஐசக் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் காணலாம்.







(படங்கள் ) கண்டியில் ரீட்டா ஐசக்.. அனைத்து இனப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். (படங்கள் ) கண்டியில் ரீட்டா ஐசக்.. அனைத்து இனப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். Reviewed by Madawala News on 10/16/2016 09:34:00 AM Rating: 5