மீளவும் ஆரம்பித்துள்ள றேஹிங்கியா முஸ்லிம்கள் மீதான இனச்சுத்திகரிப்பு.


Muja ashraff 

அண்மையில் மியன்மாரிய எல்லையில் அமைந்துள்ள சோதனை சாவடியின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் 07ற்கும் அதிகமான பொலிஸார் உயிரிழந்துள்ளமையானது பாரியளவான கொந்தழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமது வீரர்களின் உயிரிழப்புகளுக்கு பழிவாங்கியே தீறுவோமன்று றத்தவெறிபிடித்து அலையும் மியன்மாரிய அரசும் பௌத்த தீவிரவாதக் கும்பல்களும் அப்பாவி றேஹிங்கியா முஸ்லிம்கள் மீதான இனச்சுத்திகரிப்பை மீளவும் ஆரம்பித்துள்ளன

வந்தேறு குடிகளுக்கு தமது நாட்டில் இடமில்லையன்ற கோட்பாட்டில் உறுதியாக நிற்கும் பௌத்த தீவிரவாதக்கும்பல்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்த அரசு எவ்வித விசாரனை முன்னெடுப்புகளுமின்றி தமது றானுவத்தை அனுப்பிவைத்துள்ளதுடன் அங்குள்ள மதஸ்தலங்கள், பாடசாலைகளன்று சமூதாயம் வாழ்ந்ததற்கான தடயங்கள் முழுவதுமே அழித்தொழிக்கப்பட்டு வருவதோடு அந்த மக்கள் மீதான வண்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன

2015 ஆண்டு இதேபோண்றதொரு வன்முறைகள் மூலம் பல்லாயிரக்கனக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பல கோடிக்கணக்கான சொத்துகள் அழித்தொழிக்கப்பட்டதும் நினைவில் கொள்ளத்தக்கது உலக நாடுகளின் பல்வேறுவகையான அழுத்தங்களின் பிற்பாடு அந்நிகழ்வுகள் சற்றே அமந்திருந்தாலும் மீளவும் தீவிரம் பெற்றுள்ளமையானது அந்த மக்களை ஒட்டுமொத்தமாக இனச்சுத்திகரிப்புச் செய்யும் திட்டமிட்ட சதிப்புறட்சியின் வெளிப்பாடுகளையே சுட்டி நிற்கின்றன

அண்மையில் இது தொடர்பான தீர்வுகளை பெறும்நோக்கில் மியன்மார் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கொபி அணான் தலைமையிலான ஐக்கிய நாடுகளின் பிரதிகளுக்கும் பாரியளவான இடையூறுகளை ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
மீளவும் ஆரம்பித்துள்ள றேஹிங்கியா முஸ்லிம்கள் மீதான இனச்சுத்திகரிப்பு. மீளவும் ஆரம்பித்துள்ள றேஹிங்கியா முஸ்லிம்கள் மீதான இனச்சுத்திகரிப்பு. Reviewed by Madawala News on 10/16/2016 06:45:00 PM Rating: 5