Ad Space Available here

முழு டவுசருக்கு மாறிய RSS

தங்களுடைய வழக்கமான காக்கி அரை கால்சட்டை சீருடையில் இல்லாமல், பளுப்புநிறத்தில் முழு நீள கால்சட்டையோடும், முழுக்கை சட்டையோடும் அணிவகுத்து சென்ற ராஷ்டிரிய சுயம்சேவக் சங்க (ஆர்.எஸ்.எஸ்.) தன்னார்வலர்களிடம் ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றத்திற்கு நாக்பூரின் கிழக்கிலுள்ள தெருக்களும், பாதைகளும் தான் சாட்சிகள்.

காக்கி அரை கால்சட்டை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சீருடை என்பது வரலாற்றில் மாறியுள்ளது. 

1925 ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவர் இதே இடத்தில் வைத்து ஆர்.எஸ்.எஸ் -ஐ தொடங்கினார். 

அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை ஈர்க்கவும், வட மாநிலங்களில் குளிர்காலத்தில் நிலவுகின்ற அதிக குளிரை மூத்த தன்னார்வலர்கள் சமாளிக்கவும் இந்த மாற்றம் உதவும் என்பது சங்கத்தின் எதிர்பார்ப்பு.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பகவத், சில முக்கிய தன்னார்வலர்களான மஹாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, நாக்பூர் மேயர் பிரவின் டாட்கெ மற்றும் தன்னார்வலர்களுக்கு அப்பாற்பட்டு பல விருந்தினர்கள் அனைவரும் புதிய சீருடையில் தோன்றியது, ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி பேரணியை வழக்கமாக பார்ப்போருக்கு வேறுபட்டதாக தோன்றியிருக்கலாம்.

இருப்பினும், அத்தகைய மாற்றம் வெறும் சீருடையோடு மட்டுமே நின்றுவிட்டது. 

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் உரை பழைய பாதையிலேயே பயணித்து, இந்துத்துவா, ஜம்மு காஷ்மீர், பிறரை விட சுதந்திரமான மற்றும் எளிதான கல்வி வசதி போன்ற அதே பிரச்சனைகளை பற்றி குறிப்பிட்டது.

எல்லையில் மேற்கொள்ளப்படும் ஆத்திரமூட்டல்களுக்கு பதிலளிக்கும் மோதி அரசை பாராட்டிய அதேவேளை, பசு செயல்பாட்டாளர்களாக வேடமிட்டிருப்போரையும், பசுவை உண்மையிலேயே மீட்பவர்களையும் பாகுபடுத்தி பார்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். 

சாதி தீமைகளை வேற்றுக்க வேண்டிய தேவையை வலியுறுத்திய அவர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழ் நாடு, கர்நாடகம் மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் சங்க தன்னார்வலர்கள் மேற்கொண்ட ஆய்வுகள், சாதி பிளவுகள் தீவிரமாக இருப்பதை காட்டுவதாக குறிப்பிட்டார்.

வேறுப்பட்ட குடிநீர் ஆதாரங்கள், கோயில்கள், உடல் தகன எரிமேடைகள் (சுடுகாடுகள்) என இன்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பாரபட்சமாக நடத்துவது தொடர்வதாக அதில் தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார்.

சாதி பிரச்சனை பற்றி சில ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர்களிடம் கேட்ட போது..

உள்ளத்தளவில் ஒற்றுமை ஏற்பட வேண்டுமானால், அனைவருக்குமான பொதுவான வசதிகள் வேண்டுமென ஒருவர் வலியுறுத்தினார். 

புதிய தலைமுறையினர் சாதி தீமைகளுக்கு எவ்வளவு சீக்கிரம் விடை கொடுப்பர்?

இந்த கேள்விக்கு ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலரான சார்வ லோக்கரே என்பவர் சுவாரஸ்யமான பதில் தெரிவித்தார். 

நான் முதல் வகுப்பில் படித்தது முதல் இதில் பங்கெடுத்து வருகிறேன். யாரும் என்னுடைய சாதி அடையாளத்தை இன்னும் கேட்கவில்லை என்று அவர் கூறுகிறார்.

- BBC -

முழு டவுசருக்கு மாறிய RSS முழு டவுசருக்கு மாறிய RSS Reviewed by Madawala News on 10/12/2016 08:47:00 AM Rating: 5