Free Space

முஸ்லிம் பெண்களுக்கு தலாக் விவாகரத்து முறை பெரும் அச்சுறுத்தல். சிவசேனை முஸ்லிம்களிடம் வைத்த கோரிக்கை.



தலாக் விவாகரத்து முறையில் முஸ்லிம் தலைவர்கள் முற்போக்கான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்று சிவசேனை கோரியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

 பெண்களை தர்காவுக்குள் அனுமதிப்பது என்று முற்போக்கான முடிவை ஹாஜி அலி தர்கா நிர்வாகக் குழு எடுத்துள்ளதை வரவேற்கிறோம். இதுபோன்றதொரு புரட்சிகரமான முடிவை தலாக் விவாகரத்து முறையிலும் முஸ்லிம் தலைவர்கள் எடுக்க வேண்டும்.


பொது சிவில் சட்டம் தொடர்பாக நேர்மறையான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதனை வீணாக்கும் வகையில் பிடிவாதப்போக்கில் யாரும் செயல்படக் கூடாது. மதத்தின் பெயரால் பல ஆண்டுகளாக தங்களைப் பிணைத்துள்ள தளைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டுமென்று ஏராளமான முஸ்லிம் பெண்கள் காத்திருக்கிறார்கள்.

 பல தலைமுறைகளாக பெண்களுக்கு கண்ணியமான வாழ்க்கை முறைக்கான உரிமை கூட மறுக்கப்பட்டு வந்துள்ளது.

முஸ்லிம் பெண்களுக்கு தலாக் விவாகரத்து முறை பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. எனவே, பொது சிவில் சட்டம் என்பதை முஸ்லிம்களுக்கு எதிரானது என்று பார்க்காமல், அதன் நல்ல பயன்களை உணர வேண்டும்.

இதன் மூலம் முஸ்லிம் பெண்கள் மட்டுமல்லாது அந்தச் சமுதாயமே தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட வழி ஏற்படும் என்று அப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் பெண்களுக்கு தலாக் விவாகரத்து முறை பெரும் அச்சுறுத்தல். சிவசேனை முஸ்லிம்களிடம் வைத்த கோரிக்கை. முஸ்லிம் பெண்களுக்கு தலாக் விவாகரத்து முறை பெரும் அச்சுறுத்தல். சிவசேனை முஸ்லிம்களிடம் வைத்த கோரிக்கை. Reviewed by Madawala News on 10/26/2016 11:26:00 AM Rating: 5