Oceas

கம்பளை ஆசிரியர், பாடசாலை மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும்போது உயிரிழப்பு.



ஆசிரியர் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் விளையாட முற்பட்ட ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று, கம்பளை கல்வி வலையத்துக்கு உட்பட்ட கம்பளை இந்து கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்றது.

பாடசாலையின் கணித பாட ஆசிரியரான வேலு பிரபாகரன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆசிரியர் தினத்தையொட்டி பாடசாலை மைதானத்தில் ஆசிரியர்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்று போட்டி ஒன்று  நடாத்தப்பட்டது.

இதன் போது துடுப்பாட்டம் ஆடி முடித்து விட்டு  மீண்டும் ஒரு சுற்றுக்கு ஆயத்தமான குறித்த ஆசிரியர் திடீரென மயக்கமடைந்து விழுந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கம்பளை ஆசிரியர், பாடசாலை மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும்போது உயிரிழப்பு. கம்பளை ஆசிரியர்,  பாடசாலை மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும்போது உயிரிழப்பு. Reviewed by Madawala News on 10/17/2016 01:20:00 PM Rating: 5