Ad Space Available here

சுகாதார சிகிச்சை நிலையம் அமைக்க எனது காணியை எடுத்துக் கொள்ளுங்கள்.. எழுதிக் கொடுத்தார் SM சபீஸ். 4 மில்லியன் பெறுமதியான காணியை மக்களுக்காக வழங்கினார்  SM சபீஸ்

அக்கரைப்பற்றில் சுகாதார சிகிச்சை நிலையம் மற்றும் பல் சிகிச்சை நிலையம் ஆகியவற்றை  அமைப்பதற்கான காணிகளை இலவசமாக அரசாங்கத்துக்கு வழங்கி வைத்தார் எஸ் எம் சபீஸ்.

மத்திய அரசாங்கத்தால் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு தேசிய பாடசாலை வளாகத்தினுள் கட்டுவதற்காக கடந்த ஒகஸ்ட் மாதமளவில் அடிக்கல் நடப்பட்டது அந்நேரம் ஒழுங்காக திட்டமிடாமலும் முறையான அனுமதி பெறாமலும் அடிக்கல் நடப்பட்டதாக சமூக ஆர்வலர்களால் பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதோடு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்படும் எனவும் கருத்து தெரிவித்திருந்தனர்.

தற்போது தேசிய பாடசாலை வளாகத்தினுள் தனியார் பாவனைக்கு தேவையான கட்டிடங்கள் அமைப்பதற்கு சட்டசிக்கல்கள் தோற்றம்பெற எஸ் எம் சபீசை பொதுமக்கள் அணுகி பிரச்சினையை விவரிக்க தனது காணியை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி அதற்கான ஆவணகளையும் வழங்கினார் இந்நிகழ்வு நேற்று மாலை tfc மண்டபத்தில் இடம்பெற்றது.

இது தொடர்பாக கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆலாவுதீன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் பாதை அமைக்கும்போது அரையடி நிலத்தினை விட்டுக்கொடுப்பதற்கு மனமில்லாமல் மக்கள் இருக்கும் இக்காலகட்டத்தில் பொதுமக்கள் தேவைக்காக சுமார் 45 இலட்சம் பெறுமதியான காணியை எங்களுக்கு வழங்கியுள்ளார்,  இதன்மூலம் மக்கள் தேவைக்கு யார் சொந்தகாணிகளை  வழங்கப்போகின்றார்கள் என்று கேட்பவர்களுக்கு அக்கரைப்பற்றில் ஒருத்தர் இருக்கின்றார் அது சபீஸ் என்று நிருபித்துள்ளார் அதேபோன்று இத்திட்டத்திலும் அவர் பங்காளராக மாறியுள்ளார் என  தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான மீரா இஸ்ஸதீன் கருத்து தெரிவிக்கையில் சபீஸ் அவர்களின் பாட்டன் இலவகனி புலவனார் என்று புனைப்பெயரில் அழைக்கப்பட்டவர் அக்கரைப்பற்று தேசியபாடசாலை உருவாவதில் பெரும்பங்காற்றியவர் தனது காணிகளை அந்நேரம் பாடசாலைக்காக  வழங்கியதோடு தனது வீட்டுக்கூரையையும் பிரித்து கொடுத்து பாடசாலை அமைத்தவர், தனது தந்தை 77 ம் ஆண்டு அரசியல் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீர்த்ததன்பின் பலசோதனைகளை கடந்து முன்னேறியவர் சபீஸ்

தான் உழைத்த பணத்தைக்கொண்டு ஏழைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் 2004ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு வங்கி கணக்கு ஆரம்பித்து பணம் வைப்பிளிட்டுகொடுத்து அம்மாணவர்களை ஊக்குவித்ததோடு பிறை எப் எம்மில் மாணவர்களுக்கான கல்வி நிகழ்சிகளை நடாத்தி விழிப்புணர்வை ஏற்படுத்திவர் இப்படிப்பட்ட சபீஸ் இன்று மக்களின் சுகாதாரத்துக்காக பல மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியை இச்சிறு வயதிலையே மக்களுக்காக வழங்க தீர்மானித்திருப்பது மக்கள்மீது அவர்கொண்ட பாசத்தை வெளிப்படுத்துகிறது.

பணம் புகழுக்காக அரசியலுக்குள் நுழைபவர்கள் மத்தியில் சபீஸ் வித்தியாசமாக தென்படுகின்றார் மக்கள் விரோத அரசியல் நடவடிக்கைகளில் இளைஜர்களை ஒன்றுபடுத்தி போராட்டங்களை நடாத்தி அக்கரைப்பற்று மக்கள் இதயத்தில் இடம்பிடித்த இவர் ஒருசமூகத்துக்கு எதிர்காலத்தில் தலைமை தாங்ககூடிய பண்புகளை இறைவன் அவரிடமிருந்து வெளிக்கொண்டு வருகிறான் என கூறினார்.

இந்நிகழ்வில் வைத்தியர் ஹாரிஸ்,வைத்தியர் பசீர் வைத்தியர் ஆரிப்,வைத்தியர் இஸ்ஸதீன் கிராம அபிவிருத்திசங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்
சுகாதார சிகிச்சை நிலையம் அமைக்க எனது காணியை எடுத்துக் கொள்ளுங்கள்.. எழுதிக் கொடுத்தார் SM சபீஸ். சுகாதார சிகிச்சை நிலையம் அமைக்க எனது  காணியை எடுத்துக் கொள்ளுங்கள்.. எழுதிக் கொடுத்தார் SM சபீஸ். Reviewed by Madawala News on 10/27/2016 11:40:00 AM Rating: 5