சட்டத்தை நிலைநாட்ட ஜனாதிபதியும் பிரதமரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் : SP வேண்டுகோள் ..


இலங்கை மத்திய வங்கியின் முறி மோசடியில் சிக்கிய முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மஹோந்திரனை பாதுகாக்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டதும் பதிவி விலக்கப்பட்ட பின்னரும் அவருக்கு வேறு பதவி வழங்கியதும் நல்லாட்சிக்கு அழக்கல்ல என அமைச்சர் எஸ் பி திசாநாயக்க குறிப்பிட்டார்.

மத்திய வங்கி முறி மோசடி தொடர்பான கோப் விசாரனை அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் ...

மத்திய வங்கியில் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளில் 1100 கோடி மோசடி இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தை சுயாதீனமாக விசாரிக்க இடமளிக்க வேண்டும்.

நல்லாட்சி தொடர்பில் பேசிமாத்திரம் போதாது அதனை செயலிலும் காட்டவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
சட்டத்தை நிலைநாட்ட ஜனாதிபதியும் பிரதமரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் : SP வேண்டுகோள் .. சட்டத்தை நிலைநாட்ட ஜனாதிபதியும்  பிரதமரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் : SP வேண்டுகோள் .. Reviewed by Madawala News on 10/22/2016 11:43:00 PM Rating: 5