Accaddemy

அர்ஜுன் மஹேந்திரனை பாதுகாக்க UNP வேறு அறிக்கை சமர்பிப்பதாக குற்றச்சாட்டு ...



மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பாக கோப் குழுத்தலைவர் முன்வைத்த அறிக்கை இன்று கூடுதல் வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

எனினும், அந்தக் குழுவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், அவர்கள் அதற்காக ஒன்று அல்லது இரண்டு அறிக்கைகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளனர்.

இது தொடரில் அதிருப்தி வெளியிட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி கோப் குழுவின் அறிக்கையை கேள்விக்கு உள்ளாக்க ஐக்கிய தேசிய கட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், மத்திய வங்கி முறைகளில் இடம்பெற்றுள்ள மோசடிகளை மறைக்கவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது..

அர்ஜுன் மஹேந்திரனை பாதுகாக்க UNP வேறு அறிக்கை சமர்பிப்பதாக குற்றச்சாட்டு ... அர்ஜுன் மஹேந்திரனை பாதுகாக்க UNP வேறு அறிக்கை சமர்பிப்பதாக குற்றச்சாட்டு ... Reviewed by Madawala News on 10/21/2016 11:57:00 PM Rating: 5