Accaddemy

கிறு கிறுக்க' வைக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்.. டொனால்டு டிரம்ப்பும் லேசுப்பட்ட ஆளில்லை..



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று


உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் 58வது ஜனாதிபதி தேர்தல் வரும் நவ., 8ல் நடக்க உள்ளது.இதில், ஹிலாரி கிளின்டனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இவருக்கு டொனால்டு டிரம்ப் கடும் போட்டி கொடுத்து வருகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் இரு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும். ஜனநாயக கட்சி சார்பில் இரு முறை ஜனாதிபதியாக ஒபாமாவின் பதவிக் காலம் வரும் 2017, ஜன. 20ல் முடிவடைகிறது.

புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் முதல்கட்ட தேர்தல் நடைமுறை கடந்த ஜனவரியில் இருந்து ஜூன் வரை நடைபெற்றது. இதில் கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் தொழிலதிபரும், 'டிவி' தொகுப்பாளருமான டொனால்டு டிரம்ப் களம் இறங்கியுள்ளார். .

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரு தேசிய கட்சிகளின் சார்பில் தான் ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போதைய நிலையில் ஹிலாரிக்கு அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

முதல் விவாத நிகழ்ச்சியில் இவருக்கு தான் அதிகம் பேர் ஓட்டளித்தனர். வீண் பேச்சால் பெயரை கெடுத்து வரும் டிரம்ப் தொடர்ந்து சவால் கொடுக்கிறார். அடுத்த விவாத நிகழ்ச்சியில் யாருக்கு மக்கள்ஆதரவு தர உள்ளனர் என்பதை வைத்து ஓரளவுக்கு முடிவுக்கு வரலாம்.

அந்நாட்டில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அதிபர் வேட்பாளர் சார்பில் நிற்கும் 'தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்கள்' தான், இந்த ஒவ்வொருமாகாணத்திலும் நிற்கிறார்கள். இவர்களுக்குத்தான் அமெரிக்க மக்கள் ஓட்டளிக்கின்றனர்.

ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்குநேரடியாக மக்கள் ஓட்டளிக்க மாட்டர்.மாகாணங்கள் வாரியாக தேர்வு செய்யப்பட்ட 'தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்கள்' சேர்ந்து அதிபர், துணைஅதிபரை தேர்வு செய்கின்றனர். இந்த உறுப்பினர்களைத் தான் 'எலக்டோரல் காலேஜ்' என அழைக்கின்றனர். ஒவ்வொரு மாகாணத்துக்கும் அதன் வாக்காளர் எண்ணிக்கையைப் பொறுத்து இந்த 'தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்கள்' எண்ணிக்கை ஒதுக்கப்படுகிறது.

உதாரணமாக மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட கலிபோர்னியா மாகாணத்துக்கு 55 'தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்கள்' உண்டு. அதே போல மிகச் சிறிய மாநிலமான வயாமிங் மாகாணத்துக்கு 3 உறுப்பினர்கள் உள்ளனர். 'தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்களின்' மொத்த எண்ணிக்கை 538. இதில் 270 ஓட்டுகளை பெறுபவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

ஒவ்வொரு மாகாணத்திலும், அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கு இணையான எண்ணிக்கையில் 'தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்கள்' தேர்வு செய்யப்படுகின்றனர்.

அமெரிக்க அதிபரை தேர்வு செய்த உடன், இந்த உறுப்பினர்கள் கலைந்து விடுவர். அவர்களுக்கு பதவிக் காலமோ, வேறு பணிகளோ கிடையாது.
அமெரிக்க அரசியல் சாசனப்படி, இந்த 'தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்கள்', தங்களுக்குப் பிடித்த அதிபர் வேட்பாளருக்கு ஓட்டளிக்கலாம். ஆனால், சில மாகாணங்கள் இயற்றியுள்ள சட்டத்தின் படி, கட்சி மாறி ஓட்டளிக்கும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் மீது, பார்லிமென்ட் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடைமுறை, தேசிய அளவில் பொதுவானதாக இருந்தாலும், மாகாணங்கள் சில, தங்கள் வசதிக்கு ஏற்ப
தேர்வுக் குழு உறுப்பினர் தேர்வில் சில நடைமுறைகளை கடைபிடிக்கின்றன. சிலமாகாணங்கள், தேர்தலில் மெஜாரிட்டி எண்ணிக்கையில், தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்களை பெறும் கட்சிக்கே, ஒட்டுமொத்த ஓட்டுகளை அளிக்கும் நடைமுறையையும் கடைபிடிக்கின்றன.

பிராங்ளின் ரூஸ்வெல்ட் 1932ம் ஆண்டு 37வது அதிபராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து 1936, 1940, 1944 ஆகிய நான்கு முறை அதிபராக பதவி வகித்துள்ளார்.அமெரிக்க வரலாற்றில் இவர் மட்டுமே தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருந்தவர். ஏனெனில் 1951ம் ஆண்டுக்குமுன்புவரை, தொடர்ந்து 2 முறைக்கு மேல்அதிபராக இருக்கக்கூடாது என்ற சட்டமில்லாததால் இவர் 3வது முறையாக ஜனாதிபதியாக வந்தார்
அமெரிக்காவில் ஜனாதிபதி வேட்பாளர்கள்,தேர்தலின் போது விவாதம் நடத்துவது வழக்கம். இது முதன்முதலாக 1960, செப்., 26ம் தேதி அதிபர் தேர்தலில் ஜான் கென்னடிக்கும், ரிச்சர்டு நிக்சனுக்கும் இடையே விவாதம் நடந்தபோது துவங்கியது.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் போட்டியிடுகிறார். ஹிலாரி வென்றால், முதல் பெண் அதிபர் என்ற சரித்திரசாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.
அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாக முதல் அதிபர் தேர்தல் 1789ல் நடைபெற்றது. இத்தேர்தலில்10 மாகாணங்கள் மட்டுமே பங்கேற்றன. முதல் அதிபர் என்ற பெருமைக்குரியவர் ஜார்ஜ் வாஷிங்டன். இவர் 1789 ஏப்., 30ல் அதிபரானார்.

ரொனால்டு ரீகன், 69, மூத்த அதிபராக 1981ல் பதவியேற்றார். அதிக ஓட்டு (525) வித்தியாசத்தில் வெற்றி பெற்றவரும் இவரே. குறைந்த வயதில்அதிபரானவர் ஜான் கென்னடி, 43. 1961ல் இவர்பதவியேற்றார்.
கிறு கிறுக்க' வைக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்.. டொனால்டு டிரம்ப்பும் லேசுப்பட்ட ஆளில்லை.. கிறு கிறுக்க' வைக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்.. டொனால்டு டிரம்ப்பும் லேசுப்பட்ட ஆளில்லை.. Reviewed by Madawala News on 10/11/2016 07:52:00 PM Rating: 5