Accaddemy

முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வருகிறது புதிய வட் வரி..



15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள வெட் வரி திருத்தம் எதிர்வரும் நவம்பர் மாதம் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று நிதியமைச்சு கூறியுள்ளது.

அதேவேளை 2 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியும் அதே தினத்தில் இருந்து அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குறித்த வரித்திருத்தங்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் நவம்பர் மாதம் 01ம் திகதி முதல் அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்பட்ட வெட் வரி சீர் திருத்த சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வருகிறது புதிய வட் வரி.. முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வருகிறது புதிய வட் வரி..  Reviewed by Madawala News on 10/27/2016 02:34:00 PM Rating: 5