Kidny

Kidny

( Video) அரசியல்வாதிகளை வரவேற்கும் போர்வையில் மாணவர்களை பயண்படுத்த கூடாது :அப்துர் ரஹ்மான்.எட்டு வருடங்களுக்கு முன்னாள் காத்தான்குடியிலே நாங்கள் அடிமை தனத்தினை கற்றுக்கொடுத்தல் எனும் ஆசிரியர் தலைப்பிலே கட்டுரை ஒன்றினை எழுதினோம். ஏன் என்றால் அரசியல்வாதி அல்லது ஒரு அதீதி என்பதற்கு ஒரு அந்தஸ்து இருக்கின்றது. ஆனால் வீதியிலே பல மணி நேரங்கள் காத்திருந்து அரசியல்வாதிகளை மாணவர்கள் வரவேற்கின்ற பொழுது மாணவர்கள் மத்தியில் அரசியல்வாதிகள் என்பவர்கள் எஜமானர்கள் என்ற உணர்வே ஏற்படுகின்றது.


ஏன் என்றால் சமுகத்தில் மாணவர்கள் தங்களது தாய், தந்தைக்கோ அல்லது தனக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கோ கொடுக்காத மரியாதையையும் கெளரவத்தினையும் பல மணிநேரம் கொழுத்தும் வெயிலில் காத்திருந்து அரசியல்வாதிகளை வரவேற்கின்ற பயண்படுத்துகின்ற பொழுது நாங்கள் மாணவர்கள் மனங்களில் அரசியல்வதிகள் என்பவர்கள் எஜமானர்கள் என்ற உணர்வே பதிக்கப்படுகின்றது என பொறியியலளரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளருமான அப்துர் ரஹ்மான் காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலையத்திலிருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவிகளை கெளரவிக்கும் நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.


மேலும் குறித்த நிகழ்வில்  உரையாற்றிய பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அரசியல்வாதிகள் எஜமானர்கள் என்று மாணவர்களின் மனங்களில் புகுத்தப்படும் பொழுது மாணவர்கள் மத்தியில் அடிமை எனும் உணர்வும் வந்துவிடுகின்றது. ஆகவே இவ்வாறான விடயங்கள் மாணவர்களின் இளம் பராயத்தில் அடிமை தனத்தினை கற்றுக்கொடுக்கின்ற விடயமாக காணப்படுக்கின்றது. மாணவர்கள் படித்து பட்டம் பெற்று மீண்டும் அரசியல் வாதிகளின் காலடியில் தொழில் வாய்ப்பிற்காக சரணடையும் நிலைக்கு தள்ளப்படும் பொழுதே இதனுடைய தொடர்ச்சி முடிவிற்கு வந்து அரசியல்வாதிகள் எஜமானர்களாகவும் மாணவர்கள் அடிமைகளாகவும் பார்க்கபடும் உண்மை நிலை நிருபிக்கப்படுகின்றது. ஆகவே மாணவர்களின் சுய ஆளுமையினையும், சுய மரியாதையையும் பாதிக்கின்ற இவ்வாறான விடயங்களை பாடசாலைகள் செய்யக் கூடாது என எட்டு வருடங்களுக்கு முன்னே காத்தான்குடியில் இடம் பெற்ற சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆசியர் தலைப்புடனான கட்டுரையினை எழுதியிருந்தது.


இங்கு நடை பெறுகின்ற இந்த விழாவானது குறித்த மாணவிகள் நிலை நாட்டிய சாதனைக்கு போதுமானாதாக இல்லை என்பதே எனது கருத்தாக இருக்கின்றது. இந்த முழு கிராமமும் சேர்ந்து குறித்த மாணவிகளை பாராட்டுவதற்காக விழாவினை ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும். பொதுவாக அரசியல் வாதிகளுக்கு கிடைக்கின்ற மரியாதை ஆசிரியர்களுக்கு கிடைப்பதில்லை. ஆசிரியர் தொழிலில் இருந்து தன்னை முழுமையாக அர்ப்பணித்து, முழு சமுகத்தினையும் உருவாக்குகின்ற ஆசிரியர்களுக்கு எமது சமூகம் கெளரவிகும் முகமாக அவர்களுக்கு மாலை மரியாதை, பட்டம் தோரணம் எதுவும் கொடுப்பதில்லை. ஆனால் எமது வாக்குகளின் மூலம் அதிகாரத்திற்கு வந்தற்கு பிற்பாடு நாம் வரியாக கட்டுக்கின்ற பணத்தினை எங்கியிருந்தோ எமது பாடசாலைக்கு கட்டடமாகவோ அல்லது வேறு விடயமாகவோ கொண்டு வருகின்ற அரசியல்வாதிகளுக்கு கொடுக்கின்றனர்.

 இதனை எமது சமூகத்தின் மத்தியிலிருந்து பாரிய விழிர்புணர்ச்சியுடன் இல்லாதொழிக்க வேண்டும்.


கல்வியினுடைய நோக்கமும், இலக்கும் என்ன என்பது பற்றி எமது நாட்டிலும், சமூகத்திலும் புரியப்படாத விடயங்களில் முக்கிய விடயமாகவே இருக்கின்றது. கல்வியினுடைய நோக்கம் ஒரு மனிதனை ஆளுமைமிக்க , சுய மாரியாதை உள்ள, சுயமாக சிந்திக்க தெரிந்த, சரி பிழையினை கண்டறியக்கூடிய, புதிய புதிய முயற்சிகளை உருவாக்க கூடிய, சவால்களை எதிர்கொள்ள கூடிய, தன்னம்பிக்கை உள்ள, ஒழுக்கமுள்ள மனிதர்களாகவும், சமுக உறுப்பினர்களாகவும் உறுவாக்குவதாகும்.

ஆகவே அரசியல்வாதிகளை கெளரவிப்பதற்காகவும், வரவேற்பதற்காவும் இவ்வாறான வரைவிலக்கனத்தினை உடைய கல்வியினை கற்கின்ற எமது மாணவர்களை கொழுத்தும் வெயிலில் பல மணி நேரங்கள் நிற்கவைப்பதனை தடுப்பதற்கு எமது பாடசாலைகளை சேர்ந்த சமுகங்களும், நிருவாகங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோளாக இருக்கின்றது என தெரிவித்தார்.

காவத்தமுனை பாடசாலையானது பல அடிப்படைவசதிகள் இல்லாதிருந்தும் அதன் வரலாற்றில் முதற்தடைவையாக உயர்தரத்தில் சித்தியடைந்து கடந்த வருடம் இரண்டு மாணவிகளை பல்கலை கழகத்திற்கு அனுப்பியுள்ளமையானது காவத்தமுனை பிரதேசத்திற்கும் கல்குடா பிரதேசத்திற்கும் பெருமை சேர்க்கின்ற விடயமாகவே பார்க்கப்படுக்கின்றது. ஆனால் இது வரைக்கும் பிரதேசத்திற்கும், பாடசாலைக்கும் அப்பெருமை கிடைப்பதற்கு காரணமாய் இருந்த இரண்டு மாணவிகளையும் பிரதேச மக்களோ அல்லது அமைப்புக்களோ கெளரவிக்காது இருக்கின்றமை பரிதாபத்திற்குரிய விடயமாகவே இருந்து வந்தது. இதனை உண்மை படுத்தும் முகமாக குறித்த மாணவிகளை கெளரவிக்கும் நிகழ்வில் பாடசாலை மாணவிகளின் சமூக ஊடுருவல் எனும் நாடகமானது மேலும் பறைசாற்றுவதாக அமைந்திருந்து.


இந்த நிலையிலே நல்லாட்சிகான தேசிய முன்னணியும் அதன் தவிசாளர் அப்துர் ரஹ்மானும் காவத்தமுனை பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த மாணவிகளை கெளவிக்கும் முகமாக பாடசாலையின் அதிபர் ஜனாப் பிர்தெளசின் தலைமையில் விழாவினை ஏற்பாடு செய்து தலா பத்தாயிரம் ரூபாய்கள் பணப்பரிசும் நினைவு சின்னங்களும் மணவிகளுக்கு வழங்கி வைத்ததோடு கற்பித்த ஆசிரியர்களையும் கெளரவித்தனர்.

வீடியோ அப்துர் ரஹ்மானின் உரையும் கெளரவிப்பு நிகழ்வும்:- 

( Video) அரசியல்வாதிகளை வரவேற்கும் போர்வையில் மாணவர்களை பயண்படுத்த கூடாது :அப்துர் ரஹ்மான். ( Video) அரசியல்வாதிகளை வரவேற்கும் போர்வையில் மாணவர்களை பயண்படுத்த கூடாது :அப்துர் ரஹ்மான். Reviewed by Madawala News on 10/29/2016 11:06:00 AM Rating: 5