Accaddemy

விமல் வீரவன்ஸ வீட்டில் மர­ண­ம­டைந்­த இளைஞன்.. அப்டேட்.



(எம்.எப்.எம்.பஸீர்)

தலங்­கம பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஹோகந்­தர மங்­கள மாவத்­தையில் உள்ள தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்சவுக்கு சொந்­த­மான வீட் டில் தங்­கி­யி­ருந்­த­தாகக் கூறப்­படும் 24 வய­து­டைய இளஞர் ஒருவர் உயி­ரி­ழந்த சம்­பவம் குறித்து தலங்­கம பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

இச்­சம்­பவம் நேற்று பிற்­பகல் ஒரு மணி­ய­ளவில் பதி­வா­ன­தா­கவும், 24 வய­து­டைய திஸா­நா­யக்க எனும் அறி­யப்­படும் குறித்த இளைஞன் ஸ்ரீ ஜெய­வர்­தன புர வைத்­தி­ய­சா­லைக்கு விமல் வீர­வன்­சவின் வீட்­டி­லி­ருந்து கொண்டுசெல்­லப்­பட்­ட­தா­கவும் அப்­போதும் அவர் உயி­ரி­ழந்த நிலையில் இருந்­த­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இந் நிலை­யி­லேயே இந்த விடயம் குறித்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ள பொலிஸார் நேற்று மாலை விமல் வீர­வன்­சவின் மனை­வி­யான சஷி வீர­வன்ஸவின் வாக்­கு­மூ­லத்தை பதிவு செய்­துள்­ளனர்.

கடந்த சில நாட்­க­ளாக விமலின் வீட்டில் தங்­கி­யி­ருந்­துள்­ள­தாக கூறப்­படும் மேற்­படி இளைஞன் விமல் வீர­வன்­சவின் மக­னான விபுர்த்தி விஸ்­வஜித் வீர­வன்­ஸவின் நெருங்­கிய நண்பர் என கூறப்­ப­டு­கின்­றது.

எவ்­வா­றா­யினும் நேற்று முன் தினம் இரவு இளைஞன் விமலின் வீட்டில் தங்­கி­யி­ருந்­துள்ள நிலையில் அவர் மர­ண­ம­டைந்­துள்ளார்.

மூர்ச்­சை­யாக இருந்­த­தை­ய­டுத்து விமல் வீர­வன்சவின் மனைவி அந்த இளை­ஞனை ஸ்ரீ ஜெய­வர்­த­ன­புர வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்­ள­தா­கவும் அப்­போதே அவர் இறந்­து­விட்­ட­தாக வைத்­தி­யர்கள் அறி­வித்­துள்­ள­தா­கவும் இதனை மையப்­ப­டுத்­தியே சஷி வீர­வன்ச விடம் வாக்குமூலம் பதிவு செய்­யப்­பட்­ட­தா­கவும் பிர­தே­சத்தின் உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

எவ்­வா­றா­யினும் மேற்­படி இளை­ஞனின் தந்­தையும் இதே பாணியில் திடீ­ரென உயி­ரி­ழந்­த­தா­கவும் அவ­ருக்கு மார­டைப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக பின்னர் தெரி­ய­வந்­த­தா­கவும் உயி­ரி­ழந்த இளை­ஞனின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீது இன்று ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
விமல் வீரவன்ஸ வீட்டில் மர­ண­ம­டைந்­த இளைஞன்.. அப்டேட். விமல் வீரவன்ஸ வீட்டில்  மர­ண­ம­டைந்­த இளைஞன்.. அப்டேட். Reviewed by Madawala News on 10/27/2016 09:55:00 AM Rating: 5