Accaddemy

யோஷித்தவுக்கு அவுஸ்திரேலியா வீசா ரிஜக்டட்.



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச அவுஸ்திரேலியா நோக்கி செல்வதற்காக அவுஸ்திரேலியா தூதரகத்தில் விண்ணப்பித்திருந்த விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடாக பணம் தூய்மையாக்கல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியமை மற்றும் பாதத்தில் சிகிச்சை பெற வேண்டும் என நீதிமன்றத்தில் கூறியதோடு, அடுத்த நாட்களில் மரதன் போட்டியில் யோஷித கலந்து கொண்டார்.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக யோஷித மீது நம்பிக்கை வைக்க முடியாத என்பதால், அவரது விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக தூதரக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி தனக்கு சத்திரகிசிச்சை மேற்கொள்ளும் அளவிற்கு முழங்கால் மற்றும் கணுக்காலில் காயம் உள்ளமையினால் வைத்திய சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு அவரது வழக்கறிஞர்கள் ஊடாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கமைய அவரது வெளிநாட்டு கடவுசீட்டை விடுவிப்பதற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்மானித்திருந்தது. எனினும் கடந்த ஒக்டோபர் 02ஆம் திகதி 42 கிலோ மீட்டர் மரதன் போட்டியில் அவர் கலந்துக் கொண்டிருந்தார்.

எப்படியிருப்பினும் யோஷித ராஜபக்சவின் காதலியான யோஹானா ரத்வத்தே தற்போது அவுஸ்திரேலியா மெல்போர்னில் உயர் கல்வி பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யோஷித்தவுக்கு அவுஸ்திரேலியா வீசா ரிஜக்டட். யோஷித்தவுக்கு அவுஸ்திரேலியா வீசா ரிஜக்டட். Reviewed by Madawala News on 10/29/2016 01:01:00 PM Rating: 5