Free Space

லஹிரு விவகாரம்... விமலின் அடியாட்கள் அட்டகாசம். w



 

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட லஹிரு என்ற இளைஞன் தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக அம்பலப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் சிங்கள இணையத்தள ஆசிரியர் ஒருவருக்கு, விமல் வீரவன்சவின் அடியாட்கள் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்று பகல் குறித்த ஊடக ஆசிரியருக்கு விமல் வீரவன்சவின் அடியாட்கள் பல்வேறு வார்த்தைகளை பிரயோகித்து திட்டியுள்ளதோடு உயிர் அச்சுறுத்தல்களும் விடுத்துள்ளனர். அத்துடன் லஹிரு தொடர்பான அனைத்து செய்திகளையும் நீக்கி விட வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.

விமல் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சிலர் குறித்த ஊடகத்தின் ஊடக ஆசியருக்கு செய்தி ஒன்றை பெற்றுக்கொள்ள வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதன் பின்னர் மிகவும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி “வீட்டில் உள்ளவர்களுக்கு இல்லாத வருத்தம் ஊடகவியலாளர்களுக்கு ஏன் வருகின்றது? நாங்கள் தற்போது ஆட்டத்தில் இறங்கியே உள்ளோம். கவனமாக இருக்குமாறு விமல் மற்றும் தரப்பினர் ஊடக ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

எப்படியிருப்பினும் தற்போது வரையில் விமல் மற்றும் குழுவினர் குறித்த இளைஞனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை அச்சுறுத்தி அடிபணிய வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞன் மற்றும் அவரது குடும்பத்திற்கு வருமானம் பெற்றுக் கொள்வதற்கு சஷி வீரவன்சவின் உதவியை பெற்று வந்துள்ளமையே அதற்கு பிராதான காரணம் உள்ளதென கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் விமல் வீரவன்சவின் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக, சமகால அரசாங்கத்தின் பிரபல அரசியல் தலைவர் ஒருவர் தலையிட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

லஹிரு விவகாரம்... விமலின் அடியாட்கள் அட்டகாசம். w லஹிரு விவகாரம்... விமலின் அடியாட்கள் அட்டகாசம். w Reviewed by Madawala News on 10/31/2016 08:49:00 AM Rating: 5